பொது தேர்வுகளில் நீல, கறுப்பு நிற மை பேனாக்களையும், அந்த நிறத்தில் உள்ள "ஜெல்" பேனாக்களையும் விடை எழுத பயன்படுத்தலாம் என கல்வித்துறை மற்றும் தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது.
பொது தேர்வுகளில் விடை எழுத, பெரும்பாலான மாணவ, மாணவியர் நீல நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர். சிலர் கறுப்பு நிற மை பேனாவை பயன்படுத்துகின்றனர். இத்துடன், "ஜெல்" பேனாவை பயன்படுத்தலாமா என்ற குழப்பம், மாணவர் மத்தியில் நிலவுகிறது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பச்சை, சிவப்பு மற்றும் ரோஸ் நிற மை மற்றும் அதே நிறமுள்ள "ஜெல்" பேனாக்களை மட்டும் பயன்படுத்தக் கூடாது. மற்றபடி, "நீல, கறுப்பு நிற மை பேனாக்களையும், அந்த நிறத்தில் உள்ள,"ஜெல்" பேனாக்களையும், விடை எழுத பயன்படுத்தலாம்.பொதுவாக முக்கியமான கருத்துக்களை, அடிக்கோடு இடுவதற்குத் தான், கறுப்பு நிற மை பேனாவை, மாணவர் பயன்படுத்துகின்றனர்; இதில், தவறில்லை.
முக்கிய பகுதி எடுப்பாகவும் தெரியும். இதர விடைகளை எழுத நீல நிற மை பேனா அல்லது, "ஜெல்" பேனாவை பயன்படுத்துவது சிறந்தது. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார். தேர்வுத்துறை அலுவலர்களும், இதே கருத்துக்களை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி