கல்வி மாவட்டத்தை பிரிக்க தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2014

கல்வி மாவட்டத்தை பிரிக்க தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்.


நாமக்கல் கல்வி மாவட்டத்தை, நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து புதிய கல்வி மாவட்டங்களை உருவாக்க வேண்டும்" என நாமக்கல் மாவட்ட மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கழகத்தின், நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். பிளஸ் 2 பொதுத் தேர்வில், முதன்மை கண்காணிப்பாளர் ஒரே தேர்வு மையத்தில் பணியாற்ற அனுமதித்த பள்ளிக் கல்வித்துறைக்கு நன்றி. நாமக்கல் வருவாய்மாவட்டத்தில் உள்ள ஒரே கல்வி மாவட்டத்தை, இரண்டாக பிரித்து, புதிய கல்வி மாவட்டங்களை உருவாக்க வேண்டும்.

வேறு பள்ளிக்கு பணியாற்ற செல்லும், முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு, உழைப்பூதியமாக, 300 ரூபாய் வழங்க வேண்டும். நடப்பாண்டு ஓய்வுபெறும் தலைமை ஆசிரியர்களுக்கு, மே மாதத்தில் சிறப்பான பாராட்டு விழா நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் பாலசுப்ரமணியம், செயலாளர் மாணிக்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி