டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மீது அவமதிப்பு: அரசிடம் விளக்கம் கேட்க நீதிபதிகள் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 13, 2014

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மீது அவமதிப்பு: அரசிடம் விளக்கம் கேட்க நீதிபதிகள் உத்தரவு.


வி.ஏ.ஓ., பணி நியமனத்தில், ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்று, காத்திருப்போர்பட்டியலில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என, டி.என்.பி.எஸ்.சி.,தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில்,
அரசுத் தரப்பில் விளக்கமளிக்க, மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது. கீழகன்னிசேரி, சரவணன் உட்பட, ஆறு பேர்,மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, 2010 ஜூலையில் நடந்த தேர்வில் தேர்வானவர்களின், தற்காலிக பட்டியலை2011 பிப்.,20ல், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதில், எங்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. சான்றிதழ் சரிபார்ப்பில்,300 பேர் பங்கேற்கவில்லை. ஏற்கனவே பணியில் சேராமல் உள்ள, காலி இடங்களுக்கும்சேர்த்து, வி.ஏ.ஓ.,பணி தேர்வுக்கான அறிவிப்பை, 2012 ஜூலை 9ல், டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது.எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடக்கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். மனுவை, தனி நீதிபதி,தள்ளுபடி செய்தார்.ஐகோர்ட் பெஞ்சில், மேல்முறையீடு செய்தோம். டி.என் பி.எஸ்.சி., தரப்பில், 'ஏற்கனவே காலியாக உள்ள பணி இடங்களை நிரப்பும் போது,மனுதாரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும்' என உறுதியளிக்கப்பட்டது.

இதனால், வழக்கு முடிவுக்கு வந்தது.தகவல் உரிமைச் சட்டத்தில் பெற்ற விவரப்படி, 10 மாவட்டங்களில், 200 வி.ஏ.ஓ., பணியிடங்கள் காலியாகஉள்ளன.தற்போது, வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.எங்களுக்கு பணி வழங்க, நடவடிக்கை இல்லை. கோர்ட் உத்தரவை அவமதித்ததாக, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் குறிப்பிட்டிருந்தனர். நீதிபதிகள், வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி கொண்ட, 'பெஞ்ச்' அரசுத்தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்கஉத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி