பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதுபோல், பத்தாம் வகுப்பு மாணவர் களுக்கும் விடைத்தாள் நகல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைவாக பெறும் மாணவர்களில் சிலர், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் கோரி விண்ணப்பிப்பது வழக்கம். பிளஸ் 2 விடைத்தாள் நகல்களைதங்கள் வசம் பத்திரப்படுத்தும் நோக்கத்தில், ஆண்டுதோறும் பல ஆயிரம் மாணவர்கள், அரசு தேர்வுகள் இயக்கத்துக்கு விண்ணப்பித்து, அவற்றை பெறுகின்றனர். தன் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விடைத்தாள் நகல்களை காட்டி மகிழ்ச்சி அடைகின்றனர்.
பத்தாம் வகுப்பு மாணவர்கள், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கவும், விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யவும், அரசு தேர்வுகள் இயக்ககம், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,"பள்ளி வாழ்க்கையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு, முக்கிய திருப்புமுனையாக அமைகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதுபோல், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்குவதில் சிரமம் ஏதுமில்லை. கல்வித்துறை அதிகாரிகள் பரிந்துரைத்தால், அரசு தரப்பில் அனுமதிக்க வாய்ப்புள்ளது,' என்றார்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி