வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு கட்சியினர் உணவு வழங்கியதால் பிரச்னை: போலீஸ் தடியடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2014

வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு கட்சியினர் உணவு வழங்கியதால் பிரச்னை: போலீஸ் தடியடி


மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட சீர்காழி பகுதியில் வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு அரசியல் கட்சி நிர்வாகிகள் உணவு வாங்கித் தருவதாகவும், இதற்கு தேர்தல் பணி கண்காணிப்பு அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை
என்ற குற்றச்சாட்டு புதன்கிழமை இரவு முதல் நீடித்து வந்தது.இது தொடர்பாக சீர்காழியைச் சேர்ந்த சிலர், தமிழ்நாடு தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு அறைக்கும், நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் அளித்துள்ளனர். இருப்பினும், இது குறித்து மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.இந்த நிலையில், பூம்புகார், வானகிரி மீனவர் காலனி, அரசினர் உயர்நிலைப்பள்ளி வாக்குச் சாவடிப் பணி அலுவலர்களுக்கு அப்பகுதியைச் சேர்ந்த திமுகவினர் சிலர் உணவு வழங்கியுள்ளனர். இதற்கு அதிமுக தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக, திமுக மற்றும் அதிமுகவினரிடையே அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.வாக்குச் சாவடி அருகே கூட்டம் மற்றும் சச்சரவு கூடாது என காவல் துறையினர் அறிவுறுத்திய நிலையிலும், திமுக மற்றும் அதிமுகவினர் அப்பகுதியிலிருந்து விலகாததால், மத்தியப் பாதுகாப்புப் படையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி