ஜூன் 11 முதல் ஆசிரியர் பட்டயத் தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2014

ஜூன் 11 முதல் ஆசிரியர் பட்டயத் தேர்வு


ஆசிரியர் பட்டயத் தேர்வுகள் ஜூன் 11 முதல் 27 வரை நடைபெற உள்ளன.
இதற்கான, ஆண்டுத் தேர்வு கால அட்டவணையை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் என 400-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பில் முதலாம் ஆண்டில் 9 ஆயிரம் பேரும், இரண்டாம் ஆண்டில் 8 ஆயிரம் பேரும் படித்து வருகின்றனர். இதில் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 11 முதல் 18 வரையிலும், முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூன் 20 முதல் 27 வரையிலும் நடைபெறும். தேர்வுகள் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும்.

இரண்டாமாண்டு தேர்வு அட்டவணை:
ஜூன் 11 - புதன்கிழமை - இந்தியக் கல்வி முறை
ஜூன் 12-வியாழக்கிழமை-கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-2
ஜூன் 13 - வெள்ளிக்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) - 2, இளஞ்சிறார் கல்வி-2
ஜூன் 14 - சனிக்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி -2
ஜூன் 16 - திங்கள்கிழமை - கணிதவியல் கல்வி -2
ஜூன் 17 - செவ்வாய்க்கிழமை - அறிவியல் கல்வி - 2
ஜூன் 18 - புதன்கிழமை - சமூக அறிவியல் கல்வி -2

முதலாமாண்டு தேர்வு அட்டவணை:
ஜூன் 20 - வெள்ளிக்கிழமை - கற்கும் குழந்தை
ஜூன் 21 - சனிக்கிழமை - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் -1
ஜூன் 23- திங்கள்கிழமை - மொழிக்கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) -1, இளஞ்சிறார் கல்வி -1
ஜூன் 24 - செவ்வாய்க்கிழமை - ஆங்கில மொழிக் கல்வி - 1
ஜூன் 25 - புதன்கிழமை - கணிதவியல் கல்வி -1
ஜூன் 26 - வியாழக்கிழமை - அறிவியல் கல்வி-1
ஜூன் 27 - வெள்ளிக்கிழமை - சமூக அறிவியல் கல்வி-1

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி