விடைத்தாள் திருத்தும் பணியில் 'எஸ்கேப்' : தயாராகிறது ஆசிரியர்கள் பட்டியல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2014

விடைத்தாள் திருத்தும் பணியில் 'எஸ்கேப்' : தயாராகிறது ஆசிரியர்கள் பட்டியல்.


பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணியில்,பங்கேற்காத ஆசிரியர்கள் குறித்த விவரப் பட்டியல், மாவட்டம் வாரியாக தாயாரகிறது.
தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 துவங்கி 25 வரையும், பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 26 துவங்கி, ஏப்., 9 வரையும் நடந்தன. இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி, பிளஸ் 2விற்கு, மார்ச் 28 முதல் ஏப்.,12 வரையும், பத்தாம் வகுப்பிற்கு ஏப்.,10 முதல் 22 வரையும் நடந்தன.லோக்சபா தேர்தல் பணிகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற காரணங்களால், தேர்வுத் துறை எதிர்பார்த்த நாட்களுக்குள், விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவுறாமல் போனதாக சர்ச்சை எழுந்துள்ளது.விடைத்தாள் திருத்தும் பணி ஒதுக்கப்பட்டு, வராத ஆசிரியர்கள் 'பட்டியல்' கேட்டு,முதன்மை கல்வி அலுவலர்களுக்கு,'ஆன்-லைன்' மூலம் தேர்வு துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன்தொடர்ச்சி யாக, முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து, அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும், 'ஆன்-லைன்' மூலம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதில் பங்கேற்காத ஆசிரியர்கள் விவர பட்டியல் ஒரு வாரத்திற்குள் அளிக்க வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க முடியவில்லை. அப்பணியில் பங்கேற்ற மற்றும் பங்கேற்காத ஆசிரியர் விவரங்களை மாவட்டம் வாரியாக தேர்வுத் துறை கேட்டுள்ளது. பணி ஒதுக்கியும் பங்கேற்காத ஆசிரியர்கள் சரியான விளக்கம் அளிக்காத பட்சத்தில், தேர்வுத்துறை அவர்களை எச்சரிக்கலாம் அல்லது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்,என்றார். இதனால் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி