சாப்பாடு இல்லாமல் அவதிப்பட்ட மாற்றுத் தேர்தல் பணியாளர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2014

சாப்பாடு இல்லாமல் அவதிப்பட்ட மாற்றுத் தேர்தல் பணியாளர்கள்.


தேர்தல் பணிக்கு என்று தேர்வு செய்யப்பட்டிருந்த மாற்றுத் தேர்தல் பணியாளர்கள் சாப்பாடுகூட கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
தேர்தல் பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் அரசு ஊழியர்களைத் தவிர்த்து, மாற்றுதேர்தல் பணியாளர்களும் தேர்தல் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு காத்திருப்பில் வைக்கப்படுவர்.தேர்தல் அதிகாரிகளுக்குத் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டால், அவர்களுக்குப் பதில் மாற்று தேர்தல் பணியாளர்கள் பணியாற்ற அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் வடசென்னை தொகுதிக்காக திருவொற்றியூரில் உள்ள வெள்ளையம் செட்டி மேல்நிலைப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாற்றுத் தேர்தல் பணியாளர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.அவர்கள் அனைவருக்கும் சாப்பாட்டுக்குக்கூட உதவி தேர்தல் அதிகாரி ஏற்பாடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று, உதவித்தேர்தல் அதிகாரியை முற்றுகையிட்டு, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர்.

அப்போது அந்த தேர்தல் அதிகாரி, மாற்றுத் தேர்தல் பணியாளர்களுக்கும், தேர்தல் முடிந்த பிறகே சம்பளம் கொடுக்கப்படும். அதற்கு முன்பு எதுவும் தரப்படாது என்று உறுதியாககூறிவிட்டார்.இதனால் மாற்றுத் தேர்தல் பணியாளர்கள் எதுவும் செய்ய முடியாமல் தங்கள் சொந்த பணத்தைக் கொண்டே தங்கள் தேவைகளை நிறைவு செய்துகொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி