2,600 பி.இ., பட்டதாரிகளுக்கு வேலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2014

2,600 பி.இ., பட்டதாரிகளுக்கு வேலை

கடந்த ஆண்டில், பி.இ., படிப்பை முடித்த மாணவர்களில், 2,600 பேருக்கு, வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.பல்கலை செய்திகுறிப்பு: கடந்த, 2013 14ம் கல்வி ஆண்டில், படிப்பை முடித்த பி.இ., பட்டதாரிகளுக்கு, பல்கலை சார்பில், சென்னை, கோவை, நெல்லை என, மூன்று மண்டலங்களில், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்க, 24 ஆயிரம் மாணவர்கள், தகுதி பெற்றனர்.அவர்களில் இருந்து, 2,600 பேரை, இரு முன்னணி, 'சாப்ட்வேர்' நிறுவனங்கள் தேர்வு செய்தன. சென்னை மண்டலத்தில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு, நேற்று, பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.கோவை மற்றும் நெல்லை மண்டலங்களில் தேர்வு பெற்ற மாணவர்களுக்கு, வரும், 13ம் தேதி, கோவையில், பணி நியமன உத்தரவு வழங்கப்படும்.இவ்வாறு, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி