பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2014

பிளஸ் 2 மறுமதிப்பீடு முடிவு இன்று வெளியீடு


பிளஸ் 2 மாணவர்கள், 3,800 பேர், பல்வேறுபாடங்களில், மறுமதிப்பீடு கோரி, தேர்வுத் துறைக்கு விண்ணப்பித்தனர்; 200 பேர், மறுகூட்டல் கேட்டு விண்ணப்பித்தனர்.
மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்யும் பணி, நேற்று முன்தினம் முடிந்தது. தேர்வு முடிவு தயாரிக்கும் பணி, நேற்றிரவு வரை நீடித்தது.மருத்துவப் படிப்பிற்கான, 'ரேங்க்' பட்டியல், இன்று காலை, 11:00 மணிக்கு வெளியிடப்படுவதால், நேற்றிரவே, மறுமதிப்பீடு முடிவு, வேகமாக அனுப்பி வைக்கப்பட்டது.

பொறியியல், 'ரேங்க்' பட்டியல், வரும், 16ம் தேதி காலை, 10:00 மணிக்குவெளியிடப்படுகிறது. இதையொட்டி, அண்ணா பல்கலைக்கும், நேற்றிரவே, 'சிடி' அனுப்பிவைக்கப்பட்டது.மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலில், எத்தனை மாணவர்களுக்கு, மதிப்பெண் மாறியது என்ற விவரத்தை, தேர்வுத்துறை தெரிவிக்கவில்லை. எனினும், கணிசமான மாணவர்களுக்கு, மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக, தேர்வுத்துறை வட்டாரம் தெரிவித்தது.மதிப்பெண் மாற்றம் குறித்த விவரம், தேர்வுத்துறை இணையதளத்தில் (www.tndge.in) இன்று காலை வெளியிடப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி