652 கணினி ஆசி்ரியர்கள் கவலைக்கிடம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2014

652 கணினி ஆசி்ரியர்கள் கவலைக்கிடம்!


652 கணினி ஆசி்ரியர்களின் கவலைக்கிடம்.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652 கணினி ஆசிரியர்கள், நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டநாளிலிருந்துமிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள் அணைவரும் மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம்.
நாங்கள் கடந்த 1998 முதல் அரசுபள்ளிகளில் கணினி ஆசிரியராக மாதம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கிகொண்டு வேலை செய்தோம். அவர்கள் 14 வருடம் அரசு பள்ளிகளில் அவர்களுடைய உழைப்பையும், அவர்களுடைய இளமை அறிவையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செலவழித்து விட்டோம்.

இப்போது எங்களுக்கு சுமார் 45 வயதை கடந்தவர்களாக காட்சி அளிக்கிறார்கள். நாங்கள் வேற வேலையும்செய்து பிழைக்க வழியில்லை. அவர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்தில் உள்ளது. பிள்ளைகளை படிக்கவைக்கமுடியாது என்றும், Home Loan, Society Loan என்று பல கடன்களை வாங்கி விட்டார்கள். மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம். சாகும் தருவாயில் உள்ளோம்.

நாங்கள் இரண்டு தேர்வுகளிலும் தேர்ச்சி பெறவில்லை என்று எங்களிடம் பேச கூட பள்ளிக்துறைதயங்குகிறது.
முதல் தேர்வு :-
652 பேரும் அரசு பள்ளிகளில் 1999 முதல் கணினி ஆசிரியர்களாக 2000 சம்பளத்தில் வேலை பார்த்துவந்தார்கள். அவர்களின் வேலை திறனுகாகவும், ஏழை மாணவர்களுக்கு உதவி செய்த காரணத்திற்காகவும்2007 ல் சிறப்பு ஆசிரியர் தேர்வு நடத்தினார்கள் . அதில் முதலில் 50 சதவீதம் எடுக்கவேண்டும் என்றுசொன்னார்கள் பின்னர் 35 சதவீதம் எடுத்தால் போதும் என்று எங்களை பணியில் அமர்த்தீனார்கள். நாங்கள்சொல்லவில்லை 35 சதவீதம் போதும் என்று அவர்களே முடிவு செய்து எங்களை அரசு வேலையில் கணினிபயிற்றுநராக அமர செய்தார்கள். இதில் எங்கள் மீது என்ன தவறு இருக்கிறது.
இரண்டாவது தேர்வு :-

பின்னர் 652 பேருக்கும் மறுதேர்வு நடத்தினார்கள் அதில் 42 கேள்வி தவறு என்று நாங்கள் முறையிட்டோம்.இதை ஏற்க மறுத்த கோர்ட் தவறான 42 கேள்விகளையும் MADRAD IIT(மெட்ராஸ் ஐஐடி) யில் உள்ள கல்விவல்லுனர் குழுவுக்கு அனுப்பினார்கள். அவர்கள் தவறான கேள்விகளை சோதித்து இதில் 20 கேள்விகள்முற்றிலும் தவறானது எனவும், 7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி கோர்டில்ஒப்படைத்தார்கள். அதை வாங்கி கோர்ட் 20 கேள்விகளை மொத்த மதிப்பெண் 150ல் இருந்து கழித்து 130 க்குமதிப்பீடு செய்து தேர்வு முடிவை வெளியிட்டார்கள்.

7 கேள்விகளுக்கு பதில் கூற முடியவில்லை என்று கூறி எங்களை 27.7.2013 அன்று வேலையில் இருந்து தூக்கிவிட்டார்கள். 27 கேள்வி தவறு என்றால் யாரால் தேர்ச்சி பெற முடியம், 27 தவறான கேள்விகள் என்றுகண்டறியவே 3 மணி நேரத்தில் பாதி நேரம் செலவழிந்து விட்டது. பின்னர் எப்படி தேர்ச்சி பெற முடியும். எங்களை தவறான கேள்விகள் எடுத்து எங்கள் வாழ்கையை சீரளித்து விட்டார்கள், அந்த 20 தவறானகேள்விக்கான நேரம் 1.15 மணி நேரத்தை திரும்ப தருவார்களா. ஆசரியர் தேர்வு வாரியம்.
நாங்களும் ஆசிரியர்கள்தான் நாங்கள் வகுப்பில் நடத்தும் தேர்வில் கூட தவறாக கேள்வி கேட்கப்பட்டால் ,மாணவர்கள் அதற்கு மதிப்பெண் போடுங்கள் என்பார்கள். நீங்கள் தவறாக கேட்டால் நாங்கள் என்ன செய்வதுஎன்று கூறி மதிபெண் போட வைத்து விடுவார்கள். வகுப்பு தேர்விற்கு இப்படி என்றால் வாழ்க்கை தேர்விற்குஎப்படி கழிக்க மறுபடியும். கழி்த்து விட்டார்கள் ஆசிரியர் தேர்வு வாரியம்.

** நடந்த முடிந்த முதுகலை தமிழாசிரியர் தேர்வில் கூட 21 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்போட்டார்கள்.
** நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டு 4200 பேர் தேர்ச்சி பெற்றார்கள்.
** இப்போது நடந்த +2 கணித தேர்வில் கூட 6 தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போட்டார்கள்.
நாங்கள் என்ன செய்தோம். எங்களுக்கும் தவறான கேள்விதான், நாங்கள் சொல்லவில்லை , மெட்ராஸ் ஐஐடிகல்வி வல்லுனர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

இவர்களாவது புதியவர்கள், நாங்கள் 14 வருடம் அரசு வேலையில் இருந்துள்ளோம். எங்களுக்கு கழித்துவிட்டார்கள்.
மற்றவர்கள் போல் எங்களுக்கு சம உரிமை காட்டபடவில்லை, மற்றவர்கள் போல் எங்களுக்கு தவறானகேள்விகளுக்கு மதிப்பெண் கொடுக்கப்படவில்லை , மற்ற மனிதர்களை போல் எங்களையும் நடத்த வில்லை.ஆதலால் எங்களுக்கு சாவதை தவிர வேற வழியில்லை.
எங்களை காப்பாற்ற முதுகலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும், தொழிற்கல்வி ஆசிரியர்களும்,இடைநிலை ஆசிரியர்களும் வருவார்களா.

7 வது ஊதிய தொகை, அகவிலைப்படி, ஊதிய உயர்வு, என்று அரசாங்கத்திடம் முறையிடும் நீங்கள்,எங்களுடைய இறப்பையும் , எங்களுடைய குடும்பத்தையும் காப்பாற்ற வருவீர்களா, வருவீர்கள் என்றுநம்புகிறோம்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களும், அமைச்சர் அவர்களும், செயலர் அவர்களும், இயக்குநர் அவர்களும் எங்கைள காப்பாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில்தலையிட்டு இவர்களின் இறப்பை தடுக்க வேண்டும். அம்மா இவர்கள் அணைவரும் மனம் நொந்துஉள்ளார்கள், வெளியில் வராமல் வீட்டிலேயே அடைப்பட்டு கிடைக்கிறார்கள். ஆதலால் அம்மா அவர்கள்தலையிட்டு சுமூக தீர்வு காண வழிசெய்ய வேண்டும் என்று வேண்டி விரும்பிக்கொள்கிறேன்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்கள் பல நற்சேவைகளுக்கு நடுவேஎங்களையும் பாதுகாக்க வழிசெய்ய வேண்டும்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மரியாதைக்குரிய அம்மா அவர்களுக்கு நாங்கள் சாக போகிறோம்என்று அரசாங்கத்தை மிரட்டுவதாக எண்ண வேண்டாம், எங்களுக்கு இதைதவிர வேற வழிஇல்லை. நாங்கள் என்றும் ஆர்ப்பாட்டம் செய்யவோ, போராட்டம் நடத்தவோ மாட்டோம். அப்படி நடத்தவும்எங்களுக்கு மனம் இல்லை. மிகுந்த கஷ்டத்தில் உள்ளோம். எங்களுக்கு கருணை காட்டும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்!
ஆசிரியர் தேர்வு வாரியம் இப்போது நினைத்தாலும் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் போடலாம்.

இப்படிக்கு
பாதிக்கப்பட்ட கணினி ஆசிரியர்கள்

6 comments:

  1. Court method GO வந்தால் மூத்த ஆசிரீயர் அனைவருக்கும் பாதிப்பு வரும். TET மதிப்பெண் வைத்து பணி நியமனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு கிடையாது. ஆனால் +2, UG, BED MARK உள்ளே வருவதால் தான் பிரச்சனை. இவற்றில் யார் எவ்வளவு மதிபெண் பெற்றிருந்தாலும் பிரச்சனை கிடையாது, ் 50% மேல் பெற்றாலே அது University யால் அங்கிகரிகப்பட்ட Degree ஆகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் ஒன்றே.
    ஆனால் வேறுபாடு என்பது படித்து முடித்த காலங்கள். நேற்று முடித்ததும் பத்து வருடங்களுக்கு முன்னால் முடித்தவர்களும் ஒன்று என்று கூற முடியுமா. இதற்கு சரியான தீர்வு புதிய Go ல் இல்லை என்றால் எங்களுக்கு நியாயம் கிடைக்க Case போடுவோம்.
    TET ல் அதிக மதிப்பெண் பெற்ற மூத்த ஆசிரியர்களே நமது வாய்ப்பு வேரொருவரால் பரிபோகிறது. விழித்துகொள்ளுங்கள்.
    நமக்கு பாதிப்பு என்ற நிலையில் தான் பழைய Weightage முறைக்கு எதிராக நான் Case file செய்து வெற்றி பெற்றேன். Go ரத்து என்பது அனைவருக்கும் பொதுவாக அமைந்தது. ஆனால் இனிமேல் நாம் Case file செய்தால் அது அவரவர்களுக்கு தான் சாதகம் பொதுவாக அமையாது.

    ஒன்றினைவோம் போராடுவோம்...

    ReplyDelete
  2. தகுதி தேர்வு எல்லோரும் ஒரே நேரத்தில் எழுதிய தேர்வு அதில் எதுவும் பிரச்சனை கிடையாது. ஆனால் Academic qualifications என்பது எல்லோரும் ஒரே நேரத்தில் எழுதிய தேர்வு கிடையாது.

    நான் 2004 ல் முடிதேன் 10வருட கால பணி அனுபவம் உண்டு.
    Weightage mark go ரத்து பற்றி சொன்னீர்கள், சார் கேஸ் போட்டவனே நான் தான் தீர்ப்புல. முதல் பக்கத்தை பாருங்க ஜெயபாரதி னு இருக்கும்.
    Court method Go. வெளிவரும் பட்சத்தில் கேஸ் போடுவது உறுதி. ஏனென்றால் ஒரு Go வெளியிடும் போது எவர் ஒருவருக்கும் சாதக பாதகமாக அமையகூடாது. சாதகம் அடைவோர் இந்த Go தான் சரி என்று கூறுவர். அது அவர்கள் சுயநலம். ஆனால் பாதகம் அடைந்தோர் கேஸ் போட வேண்டிய சூல்நிலைக்கு ஆளாகிறார்கள்.

    பாதிக்கப்பட்டவர்கள் மூத்த ஆசிரியர்கள் மொபைல் நொம்பரை எனக்கு மெயில் பன்னவும்.

    rlakthika@gmail.com

    ReplyDelete
  3. Court Method Go. வெளிவரும் பட்சத்தில் கேஸ் போடுவது உறுதி. ஏனென்றால் ஒரு Go வெளியிடும் போது எவர் ஒருவருக்கும் சாதக பாதகமாக அமையகூடாது. சாதகம் அடைவோர் இந்த Go தான் சரி என்று கூறுவர். அது அவர்கள் சுயநலம். ஆனால் பாதகம் அடைந்தோர் கேஸ் போட வேண்டிய சூல்நிலைக்கு ஆளாகிறார்கள்.

    பாதிக்கப்பட்டவர்கள் மூத்த ஆசிரியர்கள் மொபைல் நொம்பரை எனக்கு மெயில் பன்னவும்.

    rlakthika@gmail.com

    ReplyDelete
  4. Arasangamo trb yo edn.dept. O endha oru mudivu eduthalum oru silarukku padhakamaka than irukkum.ellorukkum sadhakamana mudivai yaralum edukka mudiyathu GO No 71 m vidhi vilakku alla

    ReplyDelete
  5. Hello rajabharathi, my dob 1978 my no.7598092120 poraduvom

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி