சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம்.


தலைமை ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைகளை ரத்து செய்யகோரி குமரி மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் குறைந்ததை காரணம் காட்டி பளுகல், இரணியல், படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி ஆகிய 3 மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 12 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் எஸ்எஸ்எல்சி தேர்வில் படந்தாலுமூடு டிசிகே மேல்நிலை பள்ளி 100% தேர்ச்சியும், இரணியல் அரசு மேல்நிலை பள்ளி 94 சதவீத தேர்ச்சியும் பெற்றிருந்தது.இதனால், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை அட்டை மற்றும் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை தினமாக அனுசரிக்க அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு முடிவு செய்திருந்தது. அந்த வகையில் நேற்று தொடக்க நிலை, நடுநிலை, இடைநிலை, மேல்நிலை பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் என்று சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் பணிக்கு வந்தனர். சிலர் கோரிக்கை அட்டைகளைமட்டும் அணிந்திருந்தனர்.அந்த கோரிக்கை அட்டையில், ‘3 மாவட்ட கல்வி அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள்,சங்க பிரதிநிதிகள், முன்னிலையில் உறுதியளித்தபடி 3 தலைமை ஆசிரியர்கள் பணியிட நீக்கத்தை ரத்துசெய்ய வேண்டும், முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். ஆசிரியர்கள் மத்தியில் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தக்கூடாது’ என்று எழுதப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி