கட்டாய கல்வி சட்டத்தின்படி ஏழைகளுக்கு ஒதுக்கீடு தர மறுக்கும் மெட்ரிக் பள்ளிகள் கணக்கெடுப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 10, 2014

கட்டாய கல்வி சட்டத்தின்படி ஏழைகளுக்கு ஒதுக்கீடு தர மறுக்கும் மெட்ரிக் பள்ளிகள் கணக்கெடுப்பு.


மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத ஏழை மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்கள் சேர்க்கப்பட்ட விபரம் குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.
இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார்பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் நலிவடைந்த மாணவர்களுக்கு 25 சதவீத சேர்க்கைவழங்க வேண்டும் என்ற நியதி கடந்த கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில்தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிலும் சிறுபான்மையினர் அல்லாத அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத ஏழை மாணவர்களை சேர்க்கும் பணியை கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மாணவர்கள் சேர்க்கப்பட்ட விபரம் குறித்து பள்ளி முன் அறிவிப்பு வைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த ஆண்டு 25 சதவீத மாணவர் சேர்க்கை திட்டத்தில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு வாரம் முடிந்த நிலையில் ஒரு சில பள்ளிகளில் அந்த இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. மேலும் சில பள்ளிகளில் எங்களிடம் சேர்வதற்கு அந்த தகுதி உள்ள மாணவர்கள் வரவில்லை என கல்வித் துறையினரிடம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 25 சதவீத ஏழை மாணவர்கள் சேர்க்கை தேதியை இம்மாத இறுதி (ஜூன் 30ம் தேதி) வரை கல்வித்துறை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் முழுமையாக ஏழை மாணவர்கள் சேர்க்கப்படாத பள்ளிகள் குறித்த விபரங்கள் கணக்கு எடுக்க கல்வித்துறை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி