வி.ஏ.ஓ.,தேர்வில் வீடியோ பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 12, 2014

வி.ஏ.ஓ.,தேர்வில் வீடியோ பதிவுக்கு சிறப்பு ஏற்பாடு.


ஜூன் 14 ல் நடைபெறும், வி.ஏ.ஓ., தேர்வில், ஆரம்பம் முதல் முடியும் வரை வீடியோ பதிவு செய்யப்படுகிறது.
வருவாய்த்துறையில் காலியாக உள்ள 2,342 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, ஜூன் 14 ல் போட்டித் தேர்வு நடக்கிறது. பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதில், முறைகேடுகள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்தி முடிக்க,தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்வீடியோ பதிவில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தேர்வு துவங்கியதில் இருந்து முடியும் வரை, ஒவ்வொரு கட்டத்தையும் வீடியோ பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள் பிரிக்கப்படுவதில் இருந்து தேர்வு மையத்தின் எண்கள், அறிவிப்பு பலகை எண்களையும் பதிவு செய்ய வேண்டும்.

பார்வையற்றோர் எழுதும் மையங்களில், அவர்கள் 'ஸ்கிரைப்' (சொல்வதை எழுதுபவர்) உதவியுடன் தேர்வு எழுதுவதை அடிக்கடி பதிவு செய்ய வேண்டும். முக்கியமாக 'கேசட்' உபயோகிக்கப்படும் வீடியோ கேமரா மட்டும் பயன்படுத்த வேண்டும். 'மெமரி கார்டு' பயன்படுத்தி உபயோகிக்கும் கேமராக்களை பயன்படுத்தக்கூடாது, என மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி