தமிழகம் முழுவதும் போலீசில் காலியாக இருக்கும் பணியிடங்கள் 20 ஆயிரம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2014

தமிழகம் முழுவதும் போலீசில் காலியாக இருக்கும் பணியிடங்கள் 20 ஆயிரம்


தமிழக போலீசில், ஏ.டி.ஜி.பி., முதல் இரண்டாம் நிலை காவலர் வரை, 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, எஸ்.ஐ., மற்றும் போலீசார் தேர்வு நடக்காததால், காலியிடங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.

கட்டாயம் :

தேசிய அளவை விட, தமிழகத்தில், மக்கள் தொகை அடிப்படையிலான போலீசார் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இருந்தாலும், குற்றங்கள் எண்ணிக்கை அடிப்படையில், இதை இன்னும்உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த, ஜூலை நிலவரப்படி, டி.ஜி.பி., முதல், கடை நிலை போலீசார் வரை, 1,20,899 போலீசார் தமிழகத்திற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 1,00,490 போலீசார் மட்டும் தற்போது பணியில் உள்ளனர்.ஏ.டி.ஜி.பி., முதல், போலீசார் வரை, 20,409 பணியிடங்கள் காலியாக உள்ளன.இவற்றில், அடிப்படையில் உள்ள, தலைமை காவலர், முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் சிறப்பு காவலர்கள் எண்ணிக்கை மட்டும், 15,998; எஸ்.ஐ., பணியிடங்கள், 4,047.ஓய்வு:ஆண்டு தோறும், தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஓய்வு பெறுவதால் பணியிடங்கள் காலியானாலும், அவற்றை, நிரப்பும் பணி என்பது, எப்போதாவது மட்டுமே நடக்கிறது.சில ஆண்டுகளுக்கு முன் தான், காலிப்பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, ஆயுதப்படை போலீசாருக்கு, பணி மூப்பு அடிப்படையில், அடுத்தடுத்த நிலைக்கு மாற்றப்பட்டனர்.கடந்த, 2012ல், இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்போர் என, 13,320 பேர், தேர்வு செய்யப்பட்டு, அவர்கள், தற்போது பணியில் இணைந்துள்ளனர்.

67 அறிவிப்புகள்:

கடந்த ஆண்டு, சட்டசபையில், காவல் துறை மானியக் கோரிக்கை முடிவில், 67 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.அதில், 'இனி ஆண்டுதோறும், காவலர்கள், சிறை காவலர்கள், தீயணைப்பு பணியாளர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள் நிலையில், ஏற்படும் காலிப் பணியிடங்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை, ஒவ்வொரு ஆண்டும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவித்தார்.அப்போதே, 1,091 எஸ்.ஐ.,க்கள், 1,005 தீயணைப்போர், 292, காவலர்கள், 17,138 பேர் என, 19,526 பேர் தேர்வு செய்யப்படுவதாகவும் அறிவித்தார்.இதன் படி, 2013 - 14ல், 13,294 இரண்டாம் நிலை காவலர்கள், 305 சிறைக் காவலர்கள், 905 தீயணைப்போர் மற்றும் 1,317 எஸ்.ஐ., பணியிடங்களை நிரப்ப டிவெடுக்கப்பட்டது.

தேர்வு:

இதற்கான தேர்வுகளை நடத்த, சீருடை பணியாளர் தேர்வாணையம், அறிக்கை தயாரித்து, அரசிற்கு அனுப்பியது. ஆனால், இதுவரை ஒப்புதலோ, அதுகுறித்த அரசாணையோ வெளியாகாததால், பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, தேர்வாணய இணைய தளத்தில், 'இதுவரை, அரசிடம் இருந்து சாதகமான பதில் ஏதும், ஆணையத்திற்கு வரவில்லை. அரசாணைகள் கிடைக்கப்பட்ட பின், விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்; ஆணைகள் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது' என, கூறப்பட்டுள்ளது.

எஸ்.ஐ., தேர்வில் கலந்து கொள்வதற்காக, காத்திருப்போர் கூறியதாவது:

கடந்த, 2011ல், எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, தாலுகா எஸ்.ஐ., அளவில், 4, 047 மற்றும் சிறப்பு காவல்படையில், 48 மற்றும் ஆயுதப்படையில், 153 காலியிடங்கள் உள்ளன.ஆண்டுதோறும் தேர்வு நடத்தியிருந்தால், காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கும். முதல்வர் தலையிட்டு, விரைவாக தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது தவிர, டி.எஸ்.பி.,க்கள் நிலையில், 96; இன்ஸ்பெக்டர்கள் நிலையில், 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், டி.எஸ்.பி.,க்கள் பதவி உயர்வு மூலமும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய நேரடி நியமனம் மூலமும் நியமிக்கப்படுகின்றனர்.

27 comments:

  1. Dear Dharmapuri Selected Teacher Friends Today 14-09-2014 morning 10.00 am ku arts college ground la TTA (Tet Teachers Association) serkulu kootam nadaipera ulladhu. tuesday periyar mandrathil podhu kulu kootam nadai pera ulladhu. nam petra vaipai thakavaithu kolla sila muraigalai follow up seiya vendi ulladhu. so dharmapuri selected candidtes Today 14-09-2014 10.00 am ku arts college ground ku vanga.

    No Porattam
    No Korikai
    No Perani
    Only Nandri Arivepu Kootaam
    Mudhalil Namadhu Thagadur Mannil……
    Anbudan
    Thagadur Tamilan
    Ganesan.P
    9500391008
    More Details:

    Please Contact:

    P.Ganesan 9500391008
    Annamalai 8695998445
    Bala 9789105090
    Leader 7200334463
    Manigandan 9944663168
    Palanisamy 9942275516
    prakash 9787374420
    Rajan 7811076223
    Sakthivel 9786758579
    Sekar 9842328949
    Senthil 7868927848
    Thambidurai 9952503644
    Vadivel 7200999190
    Venkatesh 7502126007

    ReplyDelete
    Replies
    1. நாங்களும் எங்கள் மாவட்டத்தில் நன்றி கூட்டம்நடத்துகிறோம்

      Delete
  2. NO SLEEP !! NO SLEEP !!

    TNTET 2013 SPOILED MY SLEEP !!

    I WOKE UP ........NOW ... 2:02 AM

    OUR/ MY FATE !!

    ReplyDelete
  3. AMMA THAYE !!

    AMAITHI ILLA !

    VALAM ILLA !

    VALARCHI ILLA !

    ReplyDelete
    Replies
    1. Vijay sir if u don't mind shall I say 1 gud thin

      Delete
    2. Neenga nallavara kettavara?
      Tet eluthuningla illaya?
      Cunslingla Scl select paningla illaya?
      Namakku velai varuma varatha?
      Ungaluku thukkam varuma varatha?

      Delete
  4. PAYASAM SAPPIDANUM POLA IRUKU !

    BUT, I WOULD NOT DO THAT...

    THOOKAM POCHEE !!

    ReplyDelete
  5. 2 YEARS IN MY /OUR LIFE TIME ARE

    EATEN BY TNTET 2013.

    ReplyDelete
    Replies
    1. Vijay யின் மனவேதனை கொடுரமானது.அதிகமான மன னேதனைக்கு ஆட்படுகிறவன் ஒன்று பைத்தியகாரனாக்கப்படுகிறான் இல்லையென
      ன்றால் அதை ஜீரணித்துகொண்டே காமெடியணாகி விடுகிறான்.எனக்கு இதே நிலைதான்!!!

      Delete
    2. காலைவணக்கம்

      Delete
    3. Sir gurugulathala padam nadathuranga poi parunga thukkam can tho fun

      Delete
    4. Pongappa nanum thunga poraen thunga poraen

      Delete
    5. அட யாங்க சுரேஸ்.தூக்கம் வரமாட்டேங்குது

      Delete
  6. Pavi neenga gud ni8 nu solli irukanum

    ReplyDelete
    Replies
    1. நீங்க தூங்க Good night. சொல்ரேன்

      Delete
  7. 'வெயிட்டேஜ்' முறையால் (க)விழுமா ஓட்டுகள்?

    வெயிட்டேஜ்' முறையால் பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெயிட்டேஜ் முறையை எதிர்த்து, பட்டதா...
    http://tnteachersnews.blogspot.in/2014/09/blog-post_14.html?m=1

    ReplyDelete
  8. Ayyo police ku exam vaiyunga pa chickeram. Teacher tan agala police exam ku na try panalam.

    ReplyDelete
    Replies
    1. idhu tchr job illa akka 58 age varai try paana, idhula age limit physicl ftns ellam iruku

      Delete
    2. Ayyo height 163 . Weight 62. I have a confident thambi. Intha tet exam eludhi 1 yr ah odi odi practise achu. So ela physikalum pathudalam thambi

      Delete
  9. Nandri kutam adarku,poratam saiyum nanbargalukava,pls wait for 20 days.aparam.........

    ReplyDelete
  10. காலை வணக்கம், நண்பர்களே...

    நாளைப் பொழுதாவது
    நல்ல விடியலாக இருக்கட்டும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி