மலைப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல புதிய ஏற்பாடுகளை செய்யும் தமிழக அரசு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 13, 2014

மலைப்பகுதி மாணவர்கள் பள்ளிக்கு செல்ல புதிய ஏற்பாடுகளை செய்யும் தமிழக அரசு!


கோவை, திருப்பூர், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 19 மாவட்டங்களில், 1,287 மலைப்பிரதேச கிராமங்களில் உள்ள மாணவர்கள், ஜீப், ஆட்டோ போன்ற வாகனங்களில் பள்ளிகளுக்குச் செல்லவும், தேவையான குழந்தைகளுக்கு, உடன் பாதுகாவலர்கள் செல்லவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில், 14,749 பேர் இந்த வசதியை பெறுகின்றனர். தனியார் பள்ளிகள், மலைவாழ் பகுதிகளில் உள்ள மாணவர்களின் கல்வி குறித்து, சிந்திப்பது கூட கிடையாது. போதிய சாலை வசதி இல்லாத, அடர்ந்த காடுகளுக்குநடுவே உள்ள, சின்ன சின்ன கிராமங்களில் வாழும் குழந்தைகள், கல்வி பயில வேண்டும் என்பதற்காக, தமிழக அரசு, சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.மலைப்பிரதேச பகுதிகளில் உள்ள சிறுவர்கள், பள்ளிகளுக்குச் செல்வதில் உள்ளபிரச்னைகளை அறிந்த தமிழக அரசு, மாணவர்கள், பாதுகாப்புடன் பள்ளிகளுக்குச் செல்வதை உறுதிபடுத்தும் வகையில், வாகன வசதி திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.19 மாவட்டங்கள்: இந்த திட்டத்தால், கடந்த ஆண்டு 10 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்தனர். நடப்பு கல்வி ஆண்டில், கோவை, திருப்பூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், சேலம், நாகை, தேனி, நீலகிரி, நெல்லை, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் ஆகிய 19 மாவட்டங்களில் 1,287 சிறு சிறு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. இந்த கிராமங்களில் வசிக்கும் 14,749 குழந்தைகள், எந்த பிரச்னையும் இன்றி, வாகனங்களில் பள்ளி சென்றுவர, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனரகம் ஏற்பாடு செய்துள்ளது.655 அரசு பள்ளிகள்மலை பகுதிகளில் உள்ள கிராமங்களும், பள்ளிகளும், அருகருகே உள்ளன. மேற்கண்டமாவட்டங்களில் 473 ஆரம்பப் பள்ளிகளும், 182 அரசு நடுநிலைப் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. எட்டாம் வகுப்பு வரையிலான படிப்பிற்கு, இந்த அரசு பள்ளிகளை நம்பித் தான் மலைவாழ் பகுதி மாணவர்கள் உள்ளனர்.

இவர்கள், உரிய பாதுகாப்புடன் பள்ளிகளுக்கு சென்றுவர வேண்டும் என்பதற்காக,அந்த பகுதிகளில் உள்ள ஆட்டோ, ஜீப் போன்ற வாகனங்கள் மூலம் பள்ளி செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக, தேவையான மாணவர்களுக்குபாதுகாப்பாக, உடன் ஒருவர் செல்லவும், தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதற்காக, பாதுகாவலர்களுக்கு மாதம் 250 ரூபாய் வழங்கவும் அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.ரூ.4.42 கோடி நிதி: மாணவர்களின் வாகன செலவுக்காக, ஒரு ஆண்டுக்கு தலா 3,000 ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, நடப்பாண்டில், 4.42 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. அனைவருக்கும் கல்வி திட்ட நிதியில் இருந்து, இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: கிராம வாரியாக, மாணவர் எண்ணிக்கை வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் விவரம் தற்போது அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இதை, மத்திய அரசுக்கு அனுப்பி, உரிய நிதிபெறப்படும். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும், வாகன வசதி, பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. நடப்பாண்டில் 9,595 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் செலவில், வாகன வசதி மற்றும் பாதுகாவலர் வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

5 comments:

  1. Hai dear friends...
    Aided School Vacant available in Chennai...
    PG Chemistry (Bc,MBC,OC)
    B.T Science with TET Pass (Sc/St)
    B.T. Telugu Pandit with TET Pass (Sc/St)
    Contact - 9843951505|(thiru)

    ReplyDelete
    Replies
    1. CAN U EXPLAIN ABT B.T SCIENCE(SC) PLACE & SCHOOL

      Delete
  2. நாளை போராட்டம் நிச்சயம் நடக்கும் நண்பர்களே
    என்னுடைய பெயரில் போலியான நபர் ஒருவர் வந்துள்ளார்
    விரைவில் போலியான நபர் மீது சைபர் கிரைம்மில் புகார் அளிக்கப்படும்

    ReplyDelete
  3. YOUR ATTENTION:


    TOMORROW PORATTAM UNDU frnds some stupid person Rajalingam namela comments poduran.
    TOMORROW VAREER VAREER CHENNAI VAREER
    ANY DOUBT IMMEDIATELY CONTACT PORATTA COMMITTEE PLS
    VAREER VAREER CHENNAI VAREER NALAI VETRI PERA POGIROM

    ReplyDelete
  4. *********************************************************
    இடைநிலை ஆசிரியர்களுக்கு
    அழைப்புக் கடிதம்
    **********************************************************

    """""" கூடுதல் பணியிடங்கள் வேண்டுதல் சார்பாக """"""
    SGT

    இடம் : சென்னை மெரினா
    நாள் : 14.09.2014
    நேரம்:காலை 10 மணி

    மிக முக்கியமான செய்தி:
    கூடுதல் பணியிடங்கள் வேண்டி நாம் செய்யும் செயல்பாடுகள் அனைத்தும் போராட்டம் என்ற பெயரில் அல்லாமல் , மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு விடுக்கும் பணிவான கோரிக்கையாக அமையவேண்டும்.

    ஒரு தொலைக்காட்சி நிறுவனம் நமது பணிவான கருத்துக்களை ஒரு வாரகாலத்திற்கு பின்னர் பதிவு செய்துகொள்வதாக அவகாசம் கேட்டுக் கொ‌ண்டது. பின்னர் அவர்களின் ஆலோசனைப்படியே நமது கோரிக்கை மற்றும் கருத்துக்களை நாமே Digital Camera மூலமாக படம் பிடித்து குறுந்தகடுகள் மூலமாக மிக முக்கியமான 42 நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டியுள்ளது .மேலும் இத்துடன் 15 பக்க கோரிக்கை மனு இணைத்து அனுப்பி வைக்கப்படும். எனவே அனைவரும் ஒரு நாள் மட்டுமே 14.09.2014 அன்று சென்னை வரவேண்டும். வருகின்ற ஒவ்வொருவரும் தங்களது பாதிப்புகளையும், கருத்துக்களையும் மிக முதிர்ச்சியோடு பதிவு செய்ய வேண்டும். இது நிச்சயம் நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு செல்லும்.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யப்படபோகும் செயல்பாடுகளினால் பொதுமக்களுக்கோ, காவல்துறைக்கோ மற்றும் நமது அரசுக்கோ சின்னதொரு இடையூறு கூட ஏற்படா வண்ணம் அமைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ***மிக மிக முக்கியமான விஷயம் ஒன்றினை நீங்கள் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
    நமது நோக்கம் நமது கோரிக்கையை மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே ..தவிர ,மீடியாவின் கவனத்திற்கு கொண்டு செல்ல அல்ல. .***

    நமது கோரிக்கை ""கூடுதல் பணியிட அறிவிப்பு"" வேண்டுதல் தொடர்பானது மட்டுமே.
    இதுவே கடைசி முயற்சியாகவும், நோக்கம் நிறைவடையும் வகையிலும் அமைதல் வேண்டும்.

    வரும் ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக 10 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைவோம்.

    ***************************
    !! SUNDAY 14.09.2014 !!
    !! COME TO CHENNAI !!
    !! JOIN AT MERINA !!
    !! DEMAND +VACCANCY !!
    ***************************

    நமது கோரிக்கை தொடர்பான வீடியோ பதிவுகள் நேரடியாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்
    WE EXPECT YOUR DEEP INVOLVEMENT & SUPPORT

    வரவிரும்புவோர் தொடர்பு கொள்க

    95433 91234 Sathyamoorthy
    9597239898
    09663091690 Sathyajith

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி