பள்ளி மதிப்பெண் சான்றுகளின் உண்மைத் தன்மை அறிய விரும்புவோர் இனிமேல் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து சரிபார்த்துக் கொள்ளஅரசு அனுமதி வழங்கியுள்ளது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் வழங்கப்படும் மதிப்பெண் பட்டியல்கள் அனைத்து அரசுப் பணிக்கும், தனியார் பணிக்கும் அடிப்படையாக உள்ளன. பணியில் சேரும் எந்த நபரும் தங்கள் உண்மை சான்றுகளை பணி வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்கவேண்டும். பணி வழங்கும் நிறுவனம் அந்த சான்றுகளின் உண்மைத் தன்மை குறித்து சம்பந்தப்பட்ட தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கும். இதை ஏற்று பணி நாடுவோர் நிறுவனங்களுக்கு கொடுத்த சான்றுகள் உண்மையானவையா இல்லையா என்பது குறித்து தேர்வுத் துறை ஆய்வு செய்து சான்று வழங்கும். இந்த சான்றுகளை அந்தந்த நிறுவனங்களே தேர்வுத்துறைக்கு நேரடியாக அனுப்பி நேரடியாகவே பதில் பெறுவார்கள்.தேர்வுத்துறைக்கு ஆயிரக்கணக்கில் சான்றுகள் வருவதால் உண்மைத்தன்மை குறித்து ஆய்வு செய்ய கால விரயம் ஆகிறது. இதனால், அனைத்து சான்றுகளும் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டன.
இது குறித்து அரசுக்கு தேர்வுத் துறை கடிதம் எழுதியது. அரசும் தற்போது ஆன்லைனில் மூலம் உண்மைத் தன்மை குறித்து விவரங்கள் கொடுக்கலாம் என்று அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகம் கேட்டுள்ள 3000 சான்றுகளுக்கு உண்மைத் தன்மை வழங்க அரசுத் தேர்வுகள் தயாராகிவிட்டது. அதே போல தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி. ஆர் மருத்துவ பல்கலைக் கழகமும் விவரம் கேட்டு அரசுத் தேர்வுகள் துறைக்கு மனு செய்துள்ளது. அதற்கும் விவரம் வழங்க தேர்வுத்துறை அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. இதையடுத்து இனிமேல் உண்மைத் தன்மை குறித்த விவரங்கள் ஆன்லைன் மூலம் மனு செய்து ஆன்லைன் மூலமே பதில் பெற முடியும்.
BE GOOD MORNING TO ALL !!
ReplyDeleteஆசிரியர்கள் நியமனத்தில்
Deleteவெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்
விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, செப்.4-
ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளனர்.
விஜயகாந்த்
தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது போராட்டம் நடத்தி வரும் அனைவருமே சுமார் 30-லிருந்து 40-வயது வரை உள்ளவர்கள். இவர்கள் கடந்த பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெரும்பாலும் அரசு பள்ளியில் படித்து சுமார் 600 முதல் 750 மதிப்பெண்கள் வரை பெற்று, ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பயிற்சி பெற்று அதற்கான தகுதி சான்றிதழையும் பெற்றுள்ளனர். ஆனால் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்துள்ளதால், இவர்களில் பெரும்பாலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், மிகவும் பிற்படுத்தபட்டோர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்கள் ஆகிய குடும்பங்களில் உள்ளவர்களால் கண்டிப்பாக இந்த வெயிட்டேஜ் மதிப்பெண்ணை பெறமுடியாது. தற்போதுள்ள முறைப்படி இவர்களுக்கு வாய்ப்பும் கிடைக்காது.
ரத்து செய்ய வேண்டும்
பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், நகர்புறத்தை சார்ந்தவர்கள், தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் ஆகியோருக்கு மட்டுமே இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறை அதிகம் பயன் அளிக்கும். எனவே தமிழக அரசு இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்யவேண்டும்.
வெயிட்டேஜ் மதிப்பெண்ணை அடிப்படையாக கொண்டு பணி நியமனம் செய்வதை முழுமையாக ரத்து செய்யவேண்டும். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் வரை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும். சட்டபேரவையில் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் காலி பணியிடங்களை தற்போது தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை கொண்டே நிரப்பவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளில் பத்தாண்டுகளுக்கு முன் வழங்கப் பட்டதைவிட இப்போது அதிக மதிப்பெண் வழங்கப்படுவதால் புதிதாக ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களைப் பெற்று எளிதாக ஆசிரியர் பணிக்கு தேர்வாகிவிடுகிறார்கள்.
அதே நேரத்தில் பத்தாண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதித்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அவர்கள் பெற்ற மதிப்பெண் குறைவு என்பதால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில்லை. தமிழக அரசின் இந்த புதிய அணுகுமுறை அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற இயற்கை விதிக்கு முற்றிலும் எதிராக அமைந்துள்ளது. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
தமிழ்நாட்டில் இடைநிலை பட்டதாரி பயிற்சி பெற்ற 2 லட்சத்து 30,701 பேரும், பட்டதாரி ஆசிரியர் படிப்பு முடித்த 3 லட்சத்து 76,719 பேரும் வேலையில்லாமல் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 10 ஆண்டுகளுக்கு முன் படிப்பை முடித்தவர்கள் ஆவர். தமிழக அரசு கடைபிடிக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் இவர்களுக்கு வேலைகிடைப்பது குதிரைக் கொம்பாக மாறியிருக்கிறது.
தமிழக அரசு நடவடிக்கை
ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் தேவையற்ற பிடிவாதம் காட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி, வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்யவும், தகுதி மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
Delete1, சட்டசபை மீட்டிங்ல English medium school la மட்டுமே 1,30,000 மாணவர்கள் சேர்க்கை னு சொன்னாங்கஂ teachers association மூலம் conduct பன்றாங்கஂ30:1 ratio follow பன்ன எவ்ளவு வேகன்சி create பண்லாம்,
sep 5 நமக்கு சாதகமான அறிவிப்பு அம்மா சொல்லுவார் என நம்புகிறோம் . எனவே அனைவரும் சென்னை வாருங்கள் .ஆதரவு தாருங்கள்.ஓர் நாள் சிரமம் பார்க்காமல் விரைந்து வாருங்கள். கண்டிப்பாக vacancy increase செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமைதியான முறையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைப்போம். நிச்சயம் நம்மை கை விடமாட்டார்.
குறிப்பு: இங்கு வரும் அனைவருக்கும் தங்குவதற்கு இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
No weitage... Only seniority.,. Pass tet.... Register in employment... Get job...
ReplyDelete