மாணவனின் கன்னத்தை கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50000 அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 30, 2014

மாணவனின் கன்னத்தை கிள்ளிய ஆசிரியைக்கு ரூ.50000 அபராதம்: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


சென்னையில் உள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில் கடந்த 2012 ஆம் வருடம் தனது வகுப்பில் படிக்கும் பள்ளி மாணவனை ஆசிரியையான மெகருன்னிசா கன்னத்தில் கிள்ளியுள்ளார். இது குறித்து அவனது தாய் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரை விசாரித்த மனித உரிமை ஆணையம், மனித உரிமையை மீறியதற்காக அப்பள்ளிக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து தனது மகனின் மாற்று சான்றிதழை உடனடியாக வழங்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் அவனதுதாயார் கேட்டுக்கொண்டார். ஆனால் பள்ளி நிர்வாகமோ மாற்று சான்றிதழை தாமதமாக தான் வழங்கியுள்ளது.பள்ளிக்கு அபராதம் குறைவாக விதிக்கப்பட்டது மற்றும் மாற்று சான்றிதழில் தாமதம்ஆகிய காரணங்களால் அதிருப்தியடைந்த அவர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதே சமயம் மகனின் கன்னத்தில் கிள்ளிய ஆசிரியை மீதும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில் பள்ளி ஆசிரியை தன்னை பல்வேறு அமைப்புகள், தங்களது நடவடிக்கையின் மூலம் தொந்தரவு செய்வதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம். சத்தியநாராயணன் ஆகியோர், ஆசிரியை மீதான வழக்கு நடைபெறும் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலேயே இது குறித்து முறையிடலாம் என்றும், மாணவனின் கன்னத்தை கிள்ளிய குற்றத்திற்காக ரூ.50000 அபராதம் கட்டவும் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி