செல்ஃபோனில் இணைய வசதி: 3 ஆண்டில் 7 மடங்கு பெருகும்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 17, 2014

செல்ஃபோனில் இணைய வசதி: 3 ஆண்டில் 7 மடங்கு பெருகும்!


இந்தியாவில் மொபைல் ஃபோன்கள் மூலமாக இணையதள வசதி பெறுவோர் எண்ணிக்கை இன்னும்3 ஆண்டுகளில் 50 கோடியை தொடும் என (clsa) ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.இது தற்போது இருப்பதை விட 7 மடங்கு அதிகம் என்றும் அந்த நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

இணையதளம் பார்ப்பது, மின்னஞ்சல் அனுப்புவது, இசை கேட்பது, காட்சிகளைப் பதிவிறக்கம் செய்வது, பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட சேவைகளை மொபைல் ஃபோன் மூலம் பெறுவது அதிவேகமாக அதிகரித்து வருவதாக கூறியுள்ள அந்த ஆய்வு, குறைந்த விலையிலான ஸ்மார்ட்ஃபோன்கள் சந்தையில் கிடைப்பதே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளது. தற்போது 13 சதவீத இந்தியர்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தும் நிலையில் இன்னும் 4 ஆண்டுகளில் இது 41 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி