அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணி இடங்கள்: விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 4, 2014

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலிப் பணி இடங்கள்: விண்ணப்பிக்க டிசம்பர் 8 கடைசி

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 6,400 ஓட்டுநர், நடத்துநர் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8-ஆம் தேதி கடைசி நாளாகும்.

அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் ஆகிய காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் காலியாக இருக்கும் 776 சேம ஓட்டுநர் உடன் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், சென்னை மண்டலத்தில் 260 பணியிடங்களும், திருச்சி மண்டலத்தில் 256 பணியிடங்களும், நாகர்கோவில் மண்டலத்தில் 260 பணியிடங்களும் காலியாக உள்ளன.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 746 சேம ஓட்டுநர் பணியிடங்களும், 610 சேம நடத்துநர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இதேபோல், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை மண்டலத்தில் 899 சேம ஓட்டுநர், 702 சேம நடத்துநர் பணியிடங்களும், மதுரை மண்டலத்தில் 259 சேம ஓட்டுநர் பணியிடங்களும், 409 சேம நடத்துநர் பணியிடங்களும், கும்பகோணம் மண்டலத்தில் 181 சேம ஓட்டுநர், 37 சேம நடத்துநர் பணியிடங்களும், விழுப்புரம் மண்டலத்தில் 256 சேம ஓட்டுநர், 295 சேம நடத்துநர் பணியிடங்களும், திருநெல்வேலி மண்டலத்தில் 280 சேம ஓட்டுநர், 278 சேம நடத்துநர் பணியிடங்களும் காலியாக உள்ளன.

இதுதவிர, இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள் அந்தந்த போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் நவம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்தந்த மண்டல அலுவலகத்தில் டிசம்பர் 8-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 comments:

  1. திரு,ஆதி திராவிடன், இப்போது ஆ.தி.பள்ளிகளில் பணிநியமனம் செய்யுள்ள 669 காலி பணிஇடங்கள் ஆசிரியர் பணிஇடங்கள் மட்டும்தானா, இல்லை இந்த 669 காலிபணிஇடங்கள் அரசு விடுதி காப்பாளர் சேர்த்தா, இந்த பணிஇடங்கள் ஆசிரியர் மற்றும் அரசு விடுதி காப்பாளர் சேர்த்துதான், என்று எனது நண்பர் ஒருவர் சொன்னார், ப்ளீஸ் தயவு செய்து விளக்கம் தாருங்கள்.எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது .

    ReplyDelete
    Replies
    1. mulukka mulukka aasiriyar paniyidam endre trb notificationla kooriyullathu.... trb aasiriyar thervu vaariyam mattume... matra idangal anthantha thurai arivippil veliyaagum....

      Delete
    2. mr.mani sir sri sir adhi sir muni sir pls help me
      kuduthal paniyedaththiku GO vanthu vittadhu endru kurukirarkal thayavu seithu visarithhu sollavum pls pls......

      Delete
    3. udhayakumar sir wait pannunga naanum ungalai pola thaan ... uruthiyaana thagaval and notification varum varai kathirungal.... ethaium nampa venam sir... manasu rompa kastapadum apram illanaa...

      Delete
  2. adhi anna gud morn anna go 71 patri vilakamaga solugalen plz

    ReplyDelete
  3. icm marriage senjavanga salem dt ,pls send me your phone number or mail , my mail id alaguamul@gmail.com

    ReplyDelete
  4. Sri sir is there any educational qualification for driver conductors .

    ReplyDelete
  5. nalla weightage irundhal mattume driver,conducter velai

    ReplyDelete
  6. Rmsa கீழ் வருவதால் இன்னும் சம்பளம் பபோடவில்லை ஸ்ரி Go இருந்தால் பதிவிடவும்

    ReplyDelete
  7. SUPREME COURT LA GO NO 71 AND GO NO 25 KU AGAINSTA MORE CASES ARE FILING .CASE NUMBER-29634------NALINI CHITHAMBARAM(GO NO 71),29353,29354---SANKARAN (GO NO 71),29245----SANKARAN (GO NO 25)

    ReplyDelete
    Replies
    1. Evalavu sonnugile case entha Date varuthunu sollaliye what bos athai unga lawer sollalaya

      Delete
  8. nalaiku kandipa theerpu varuma adi dravidan sir

    ReplyDelete
  9. Today entha news illaya about Adw list and court case

    ReplyDelete
  10. any news about adw seletion list

    ReplyDelete
  11. FLASH NEWS: TNTET நவம்பர் 10 க்குள் புதிய ஆசிரியர் பட்டியல் வெளியாகிறது?

    ReplyDelete
  12. நண்பர்களே! நவம்பர் 10க்குள் இரண்டாவது பட்டியல் வெளியடப்படும் என்று சொல்லுவது எவ்வாறு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை, ஏனெனில் முதல் தேர்வு பட்டியலே இன்னும் வெளியிடவில்லை.முதல் தேர்வு பட்டியல் முழுமையாக வெளியிட்ட பின்புதான் இரண்டாவது பட்டியல் சாத்தியம்.இப்போது முதல் தேர்வு பட்டியல் அதிக வேடஜி உடையவர்கள் நலத்துறை பள்ளிகளில் பணிநியமனம் பெறுவார்கள். பின்பு குறைவான வேடஜி உடையவர்கள் கல்வித்துறையின் கீழ் பணிநியமனம் பெறுவார்கள் இது எப்படி சாத்தியமாகும். அப்படியே வந்தாலும் ஆ.தே.வாரியம் பல வழக்குளை இதனால் சந்திக்க வேண்டிருக்கும்.அதனால் முதல் தேர்வு பாட்டில் வந்தபின்பு அனைவரும் பணிநியமனம் பெற்றபின்தான் இரண்டாவது தேர்வு பாட்டில் வெளிவருவது சாத்தியம்.ஆனால் நவம்பர் 10க்குள் முதல் தேர்வு பட்டியல் அனைத்தும் வெளியிட்டு அனைவரையும் பணிநியமனம் அரசு செய்தால்தான் இது சாத்தியம்.எல்லாம் அந்த இறைவன் கையில், தேர்வு பட்டியலை எதிர்நோக்கி காத்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கு அந்த இறைவனால் நன்மை நடந்தால் சரியே!

    ReplyDelete
  13. அப்படி நடந்தால் நல்லது தானே

    ReplyDelete
  14. adi sir tomorrow ramar case theerpu veruma sir,theerpu vanthavudan adw selection list vitruvangala

    ReplyDelete
  15. SUPREME COURT LA CASE COME MONDAY HEARING COME

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி