பொதுத்தேர்வில் மாநில தேர்ச்சியை 95 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2014

பொதுத்தேர்வில் மாநில தேர்ச்சியை 95 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை

"10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சியை மாநில அளவிலான தேர்ச்சியை 90ல் இருந்து 95 சதவீதமாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.. 

சென்னையில் நேற்றுமுன்தினம் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் காலாண்டு தேர்ச்சி சதவீதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "அடுத்தாண்டு நடக்கும் 10ம்வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை மாநில அளவில் 90ல் இருந்து 95 ஆக உயர்த்த அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை மேற்கொள்ள முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதற்காக தலைமையாசிரியர்கள் மூலம் மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு வினா-விடை புத்தகம் வழங்கப்பட்டு சிறப்பு பயிற்சியளிக்கப்பட உள்ளது. 6,7,8,9ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் எழுதும் திறன், பேசும் திறன், அடிப்படை கணிதத்தை மேம்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது,”என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி