டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிடுமாறு தேர்வாணையத்திற்கு திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வணிகவரித்துறை, கல்வித்துறை உள்ளிட்ட மாநில அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஆயிரத்து 64 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் சில மாதங்களுக்கு முன் குரூப் 2 முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தேர்வான 11,500 பேர் முதன்மை தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்தத்தேர்வு வரும் 8ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஹால் டிக்கெட்டுகள் இதுநாள் வரை வெளியிடப்படவில்லை என்று தேர்வாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் தமிழகத்தில் முதன்முறையாக குரூப் 2 தேர்வு கணினி முறையில் நடைபெறவுள்ளதால் அறிவிக்கப்பட்ட நாளில் தேர்வு நடைபெறுமா என தேர்வு எழுதுவோர் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. ஆகவே ஹால் டிக்கெட்டை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hall ticket vanthitu. .
ReplyDeleteTet 5% relaxation irukka sir?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete