கேந்திரிய
வித்யாலயாப் பள்ளிகளில் சம்ஸ்கிருதம் அல்லது ஜெர்மன் என்று
இருந்த மொழிப் பாடத்தில் ஜெர்மன்
மொழியை எடுத்துவிட்டு சம்ஸ்கிருத மொழியை மட்டும் கற்றுத்
தர மத்திய அரசு மேற்கொண்ட
முயற்சியை உச்சநீதிமன்றம் தடுத்திருக்கிறது.
சம்ஸ்கிருத
மொழியைச் சொல்லித் தரக் கூடாது என்றோ
ஜெர்மன் மொழியை எடுக்கக் கூடாது
என்றோ உச்சநீதிமன்றம் சொல்லவில்லை. கல்வி ஆண்டின் நடுவில்
இப்படிப் பாடத் திட்டத்தை மாற்றுவதற்குத்
தடை விதித்திருக்கிறது.
கன்னியாகுமரி
நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினர்
ஜெ. ஹெலன் டேவிட்சன் தமிழ்நாட்டில்
உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் தமிழ் மொழி சொல்லித்
தரப்பட வேண்டும் என்று 8-5-2013 அன்று நாடாளுமன்ற விதி
377-இன்கீழ் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
இராணுவத்தில்
பணியாற்றுகிறவர்களின் பணியிட மாற்றங்களால் குழந்தைகளின்
படிப்புக்கு இடையூறு வரக் கூடாது
என்பதற்காக 1962-இல் தொடங்கப்பட்ட மத்திய
அரசுப் பள்ளிகள் (Central schools) பின்னர் கேந்திரிய வித்யாலயாப்
பள்ளிகளாகப் பெயர் மாற்றம் பெற்றன.
பின்னர்,
இராணுவத்தினரின் குழந்தைகளுக்காக இராணுவப் பள்ளிகள் தொடங்கப்பட்டதும் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் மற்றவர்களுக்கும் இடம் கிடைத்து வருகின்றன.
இந்தியாவில்
1,090 பள்ளிகளும் காத்மண்டு, மாஸ்கோ, தெஹ்ரான் (ஈரான்)
என்று வெளிநாடுகளில் மூன்றுமாக 1,093 கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றின் தலைநகரம் புது தில்லி. மனித
வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையின் கீழ் இப்பள்ளிகள் இயங்கி
வருகின்றன.
2012-இல்
இப்பள்ளிகளில் 11,21,012 மாணவர்கள் படித்துள்ளனர். ஆசிரியர்களும் பணியாளர்களுமாக 56,445 பேர் பணியாற்றுகின்றனர். தமிழ்நாட்டில்
மொத்தம் 44 பள்ளிகள் உள்ளன.
2012-13 ஆம்
ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.2454.34
கோடி (திட்டம் சாராப் பணிகளுக்கு
ரூ.2104.34 கோடி, திட்டம் சார்ந்த
பணிகளுக்கு ரூ.350 கோடி). முதல்
வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்புவரை இப்பள்ளிகளில்
மாணவர்கள் இருபாலரும் சேர்ந்து படித்து வருகின்றனர். மாணவர்கள்
சேர்க்கையில் இட ஒதுக்கீடு தொடக்க
நிலையில் நடைமுறையில் உள்ளது.
தாழ்த்தப்பட்ட
வகுப்பினரின் குழந்தைகளுக்கும் கேந்திரிய வித்யாலயாவில் பணிபுரிவோர் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கு ஒரே குழந்தையாக உள்ள
பெண் குழந்தைகளுக்கும் கட்டணம் இல்லை.
கேந்திரிய
வித்யாலயாப் பள்ளிகளில் இந்தியா முழுதும் ஒரே
மாதிரியான பொதுப்பாடத் திட்டம்தான் உள்ளது. கணக்கு, அறிவியல்
பாடங்களுக்கு ஆங்கிலமும் சமூக அறிவியல் பாடங்களுக்கு
ஆங்கிலமும் இந்தியும் பயிற்றுமொழிகளாக உள்ளன.
முதல் ஐந்து வகுப்புகளுக்குப் பாடமொழிகளாக
ஆங்கிலமும் இந்தியும் உள்ளன. ஆறாம் வகுப்பு
முதல் எட்டாம் வகுப்புவரை ஆங்கிலம்,
இந்தி, சம்ஸ்
கிருதம்
அல்லது ஜெர்மன் என்று மூன்று
மொழிகளும் பாடமொழிகளாக உள்ளன.
ஒன்பது,
பத்தாம் வகுப்புகளில் ஆங்கிலம், இந்தி அல்லது சம்ஸ்கிருதம்
என்று இரண்டு மொழிகள் பாடமொழிகளாக
உள்ளன. 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் கணிதப்
பிரிவு எடுப்போர்க்கு ஆங்கிலம் மட்டுமே பாடமொழி. பிற
பிரிவுகளில் படிப்போர்க்கு ஆங்கிலமும் இந்தியும் பாடமொழிகள்.
இந்தியாவில்
சம்ஸ்கிருதம் அல்லது ஜெர்மன் மொழியும்
மாஸ்கோவில் பிரெஞ்சு அல்லது ருஷ்ய மொழியும்
பாடமொழிகளாக இருந்து வருகின்றன. வேலை
வாய்ப்பினைக்
கருதி இந்தியாவில் சம்ஸ்கிருதத்தைப் படிக்காமல் ஜெர்மன் மொழியைப் படிக்க
மாணவர்கள் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.
இந்நிலையில்
மத்திய அரசு ஜெர்மன் மொழியை
எடுத்துவிட்டு சம்ஸ்கிருதத்தைக் கட்டாயப்படுத்த எண்ணியது.
ஜெர்மனி
அரசு, இந்தியாவில் உள்ள கேந்திரிய வித்யாலயாப்
பள்ளிகளில் ஜெர்மன் மொழியை நீக்கக்
கூடாது என்று பிரதமர் மோடியிடம்
வலியுறுத்தி இருக்கிறது.
ஹெலன் டேவிட்சன், தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாப்
பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படவேண்டும்
என்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாப்
பள்ளிகளுக்கு 26-6-13 அன்று ஒரு சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கேந்திரிய வித்யாலயாவின் கல்வி விதியின் 112-ஆம்
பிரிவில் கூறப்பட்டுள்ளவாறு மாநில மொழி அல்லது
தாய்மொழியைக் கற்க 20 அல்லது அதற்கும்
மேற்பட்ட மாணவர்கள் விரும்பினால் கூடுதல் ஏற்பாடுகள் செய்துதரப்பட
வேண்டும் என்றும் இதற்காக ஒப்பந்த
அடிப்படையில் ஆசிரியர்களைத் துணை ஆணையரின் அனுமதி
பெற்று நியமித்துக் கொள்ளலாம் என்றும் ஆறாம் வகுப்பிலிருந்து
எட்டாம் வகுப்புவரையிலும் தேவைப்பட்டால்
ஒன்பது
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும்கூட கற்றுத்
தரலாம் என்றும் பள்ளி நேரத்திலேயே
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று
வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும்
என்றும் 2013 - 14-ஆம் கல்வி ஆண்டிலிருந்தே
தமிழகக் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்பட
வேண்டும் என்றும் இதுகுறித்து எடுக்கப்பட்ட
நடவடிக்கையை 1-7-2013-க்குள் தெரிவிக்க வேண்டும்
என்றும் கூறப்பட்டுள்ளன.
தேர்ச்சி
பெறுவதற்குத் தமிழ்ப் பாடத்தில் தேர்வு
எழுதி மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதில்லை.
இருந்தாலும் தமிழகக் கேந்திரியப் பள்ளிகள்
பலவற்றில் தமிழ்மொழியைக் கற்றுத் தர போதிய
நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கேந்திரிய வித்யாலயாப்
பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கம் (சென்னை), துணை
ஆணையருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.
ஜெர்மன்
மொழி இருக்க வேண்டும் என்று
ஜெர்மனி அரசு வற்புறுத்துகிறது. நாமும்
ஜெர்மன் மொழி இருக்க வேண்டும்
என்று குரல் கொடுக்கிறோம்.
முன்னரே
ஆணையிட்டும் தமிழைத் தொடங்காமல் உள்ள
தமிழகக் கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளிலும் தமிழைக் கற்றுத் தர
வேண்டுமென்று குரல் வந்ததாகத் தெரியவில்லை.
மாஸ்கோவில்
உள்ள கேந்திரிய வித்யாலயாப் பள்ளிகளில் பிரெஞ்சு அல்லது ருஷ்யன் என்றிருப்பதைப்
போல, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ்
அல்லது சம்ஸ்கிருதம் என்று வைக்கலாம்.
முடிந்தால்
கேந்திரியப் பள்ளிகளில் இந்தியா முழுதும் தமிழ்
அல்லது சம்ஸ்கிருதம் என்று பாடமொழியை மாற்றலாம்.
அல்லது விருப்பப் பாட மொழியில் தேர்வு
இல்லை என்பதால் இரண்டு மொழிகளையும் விருப்பப்
பாடமாகச் சேர்க்கலாம்.
உலகச் செம்மொழிகளில் தமிழும் சம்ஸ்கிருதமும் இடம்பெற்றிருப்பதைப்
போல கேந்திரியப் பள்ளிகளிலும் இடம்பெறுவது பண்பாட்டு இந்தியாவைப் பார்க்கத் துணை செய்யும்.
கேந்திரியப்
பள்ளிகளின் நோக்கங்களில் இந்திய ஒருமைப்பாட்டை மாணவர்கள்
மனதில் வளர்த்தல் வளரும் தலைமுறையை இந்தியராக
உணரச் செய்தல் ஆகியவை குறிப்பிட்த்
தக்கவையாக உள்ளன.
இந்தியப்
பண்பாட்டு வரலாறு தமிழைத் தவிர்த்து
எழுத முடியாது.
கேந்திரிய
வித்யாலயாப் பள்ளிகளின் நோக்கங்கள் பண்பாட்டின் அடித்தளத்தில் நிறைவேற்றப்பட வேண்டியவை. அவை நிறைவேற, தமிழ்மொழி
தொல்லையாக
இருக்காது. மாறாக வேறு எந்த
மொழியை விடவும் துணையாக இருக்கும்.
கட்டுரையாளர்:
முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
நன்றி-தினமணி.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி