:“கர்நாடகா மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும், மார்ச் மாதத்துக்கு பின் தான், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். அதற்கு முன், அட்மிஷன் செய்தால் அபராதம் விதிக்கப்படும்,” என, கல்வித்துறை கமிஷனர் முகமது மொய்சின் எச்சரித்துள்ளார்.
பெங்களூரில், அவர் கூறியதாவது:அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை, இலவசமாக குழந்தைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். நிதியுதவி பெறாத பள்ளிகள், 600 ரூபாய் மட்டும் கட்டணம் பெற வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் செயல்பாடுகளை, மார்ச் 2ம் தேதிக்கு பின், துவக்க வேண்டும். தவறினால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
கடும் விதிமுறைகள்:அட்மிஷன் சந்தர்ப்பத்தில், அனைத்து ஒதுக்கீடுகளையும் பின்பற்ற வேண்டும். மாணவர்களின் சேர்க்கைக்காக, பெற்றோருக்கு தேர்வு நடத்துவது அல்லது நேர்முகத்தேர்வு நடத்துவதும் கூடாது.
இதை மீறினால், முதன் முறையாக, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மீறினால், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, சுற்றிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது பற்றி, பொதுமக்களிடமிருந்து புகார்கள் வருகின்றன.
இதையடுத்து, சில கடும் விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இவற்றை, பின்பற்றுவது கட்டாயம். இலவசம் மற்றும் கட்டாய கல்வி விதிமுறையின்படி, 2015 - -16ல், முதல் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரையிலான அட்மிஷன் தொடர்பாக, கல்வித்துறை கடுமையான விதிமுறைகளை செயல்படுத்தி, கடந்த, 28ம் தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை கடுமையாக செயல் படுத்தும்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கல்வித்துறை துணை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக...:ஒன்றாம் வகுப்பிலிருந்து, 10ம் வகுப்பு வரையிலான அட்மிஷனுக்கு, மார்ச் 2ம் தேதி, சீட்களின் எண்ணிக்கை மற்றும் அட்மிஷன் அட்டவணையை வெளியிட வேண்டும். இதற்கு முன்னதாக, குழந்தைகளை அட்மிஷன் செய்தால், அது, சட்டவிரோதமாக கருதப்படும்.
அட்மிஷனுக்கான விண்ணப்பங்களை, மார்ச் 21ம் தேதியில் இருந்து, 31ம் தேதி வரை வழங்க வேண்டும். ஏப்., 15ம் தேதியில் இருந்து, 22ம் தேதிக்குள், குழந்தைகளை அட்மிஷன் செய்து கொள்ள வேண்டும். அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், இந்த அட்டவணையை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி