பெரம்பலூர் மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், எழுத, படிக்க தெரியாதவர்களுக்கு மார்ச் 15ஆம் தேதி அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெறஉள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் "கற்கும் பாரதம்' திட்டத்தில் பயன்பெற விரும்பும் 15 வயது முதல் 80 வயதிற்குட்பட்ட எழுத, படிக்க தெரியாத வர்களுக்கு, வரும் 15ஆம் தேதி, அவர்களுக்கென அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடைபெற உள்ளது.இந்த தேர்வானது, அந்தந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த தேர்வை "கற்கும் பாரதம்' மையத்தில் படித்து வருபவர்கள் உள்பட அனைவரும் எழுதலாம். மேலும், கடந்த முறை நடந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்களும் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி