மொபைல் மூலம் 90 சதவீத 'ஆன் லைன் ஆர்டர்' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 7, 2015

மொபைல் மூலம் 90 சதவீத 'ஆன் லைன் ஆர்டர்'


வலைதளம் வாயிலாக பொருட்கள் வாங்குவதில், மொபைல்போன் பங்களிப்பு, 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, என, மிந்த்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களிப்பு:

வலைதளம் வாயிலாக, பேஷன் பொருட்களை விற்பனை செய்யும் இந்நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு: ஆன்லைன் வாயிலாக பொருட்களை விற்பதற்கு, மொபைல்போன் சேவைகள், குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன. நிறுவனத்தின் பொருட்களுக்கு, 90 சதவீதம் மொபைல் போன் மூலமாக ஆர்டர் வருகிறது. இதில், 85 சதவீதம், ஆண்ட்ராய்டு, ஐ.ஓ.எஸ்., மற்றும் விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளின் பங்களிப்பு உள்ளது. அதிலும், இரண்டு மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து, 50 சதவீதத்திற்கு மேல் மொபைல் போன் வாயிலாக ஆர்டர் வருவது ஆச்சரியமாக உள்ளது.அதிக நுகர்வோர்:அண்மையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், சீனாவை அடுத்து, இந்தியாவில் தான், அதிக அளவிலான நுகர்வோர்கள், வலைதளம் மூலம் பொருட்கள் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில், 15 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகின்றனர். மொபைல் போன் பயன்பாடு, வரும், 2020ம் ஆண்டு, 45 சதவீதம் அதிகரித்து, 52 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நுகர்வோரின் வாங்கும் பழக்கத்தை மொபைல் போன் மாற்றிவருகிறது.

பதிவிறக்கம்:

கடந்த, 2014ம் ஆண்டு மே மாதம், மிந்த்ரா நிறுவனம், மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. ஒன்பது மாதங்களில், 60 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தியாவில் பேஷன் பொருட்களுக்கான செயலி களில், மிந்த்ரா, முதல்இடத்திலும், ஆண்ட்ராய்டு செயலி அங்காடி யின் தர வரிசையில், நான்காவதாகவும் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி