சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்-அமைச்சர் தனி பிரிவில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டா)JACTA கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்போல், தமிழக அரசின் கீழ் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்.தன்பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை (சி.பி.எஸ்.) ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தை (ஜி.பி.எப்.) நடைமுறைப்படுத்த வேண்டும்.தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்ட அனைத்து நிலை ஆசிரியர்களையும் பணியில் சேர்த்த நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறையில் வழங்குவதுபோல, மாவட்ட அளவிலான கலந்தாய்வின் மூலம் பொதுமாறுதல்வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Indha trb la additional list or welfarelist edhadhum poduvaargala? Cv mudithu selection listil varadhavargal last cutofil irupavargaluku job kidaika edhadhum vaaipu ulladha? Anybody know about that means pls tell.....
ReplyDelete