கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 23, 2015

கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி: விருப்ப பாடமாக்க ஒப்பந்தம் தயார்

''நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஜெர்மன் மொழியை, விருப்ப படமாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானி, லோக்சபாவில் கூறியதாவது: கே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி, மூன்றாவது பாடமாக இருந்தது. இது தொடர்பாக, ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனத்துக்கும், நம் நாட்டில் உள்ள நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது.


இந்த ஒப்பந்தம், அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக இருந்ததால், ஜெர்மன் மொழிக்கு பதில், சமஸ்கிருதத்தை மூன்றாவது மொழியாக்குவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெர்மன் - இந்திய அரசுகளுக்கு இடையே சமீபத்தில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி, கே.வி., பள்ளிகளில், ஜெர்மன் மொழி, விருப்ப பாடமாக இருக்கும். நம் நாட்டு மாணவர்களுக்கு ஜெர்மன் மொழியை கற்றுத் தருவதற்காகவும், ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனங்களில் இந்திய மொழியை கற்றுத் தருவதற்காகவும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி