பள்ளி மேம்பாட்டுக்குரூ.100 கோடி ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2015

பள்ளி மேம்பாட்டுக்குரூ.100 கோடி ஒதுக்கீடு


ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்காக, நடப்பாண்டு, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.ஊரகப் பகுதிகளில் உள்ள, ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், புதிய கட்டடம், சமையல் கூடம் கட்டுதல், குடிநீர் வழங்குதல், கழிப்பறைகள் ஏற்படுத்துதல், போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக, 2011-12ல், ஒருங்கிணைந்த பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் துவக்கப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்த, ஒவ்வொரு ஆண்டும், 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.நடப்பாண்டும், 100 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியப் பங்கில் இருந்து, 67 கோடி ரூபாய், மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்து, 33 கோடி ரூபாய், எட்டு தவணைகளில், மாவட்டங்களுக்கு விடுவிப்பு செய்ய வேண்டும் என, ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று, அரசு, 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, ஒப்புதல் அளித்து, அரசாணை ெவளியிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும்ெவளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி