வரும் 12, 13ம் தேதிகளில் சி.இ.டி., தேர்வு: முதன் முறையாக ஆன்லைன் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2015

வரும் 12, 13ம் தேதிகளில் சி.இ.டி., தேர்வு: முதன் முறையாக ஆன்லைன் விண்ணப்பம்

"கர்நாடகா தேர்வு வாரியம் நடத்தும் இன்ஜினியரிங், மருத்துவம் உட்பட தொழில் சார்ந்த பயிற்சி வகுப்புகளின் அட்மிஷனுக்காக, '2015 சி.இ.டி., தேர்வு' இம்மாதம் 12, 13ம் தேதிகளில் நடக்க உள்ளது,” என, தேர்வு வாரிய இயக்குனர் சுஷ்மா கோடுபோலே கூறினார்.

50 மதிப்பெண்:


நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இன்ஜினியரிங், மருத்துவம் உட்பட வெவ்வேறு தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு அட்மிஷனுக்காக, கர்நாடகா தேர்வு வாரியம் நடத்தும், '2015 சி.இ.டி., தேர்வு' இம்மாதம் 12, 13ம் தேதிகளில் நடக்கிறது. வரும், 12ம் தேதி காலை, 10:30 - 11:50 மணி வரை உயிரியல்; மதியம், 2:30 - 3:50 மணி வரை கணித தேர்வுகள்; 13ம் தேதி காலை, 10:30 - 11:50 வரை, பவுத சாஸ்திரம்; மதியம், 2:30 - 3:50 வேதியியில் தேர்வுகளும் நடக்கின்றன. இத்தேர்வுகள், 50 மதிப்பெண் கொண்டதாக இருக்கும். வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்காக, வரும், 13ம் தேதி மாலை, 4:45 - 5:45 மணி வரை, கன்னட மொழி தேர்வும்; விவசாய பிரிவு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு, வரும், 16ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல் நடக்கவுள்ளது.

1.58 லட்சம் பேர்:
இம்முறை, சி.இ.டி., தேர்வில், 1.58 லட்சம் மாணவர்கள் பங்குபெற உள்ளனர். இத்தேர்வுக்காக, மாநிலம் முழுவதும், 340 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் மட்டுமே, 73 தேர்வு மையங்கள் உள்ளன. இதே போன்று, வெளிமாநிலம், வெளி நாடுகளிலிருந்து தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை, 2,219. இவர்கள், பெங்களூரின், 58 தேர்வு மையங்களில், சி.இ.டி., தேர்வு எழுதவுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி, அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்களிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 'ஹால் டிக்கெட்'களை டவுன்லோடு செய்துகொள்ள, அனைத்து மாணவர்களுக்கும், ஏற்கனவே எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது. சி.இ.டி., தேர்வுக்கு, முதன் முறையாக, ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்படுகிறது. மாணவர்களுக்கு முழுமையான தகவல்களை தெரிவிக்கும், 'இ பிரவுச்சர்' பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி