சட்ட கல்லூரி விண்ணப்பம் விற்பனை திடீர் ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2015

சட்ட கல்லூரி விண்ணப்பம் விற்பனை திடீர் ஒத்திவைப்பு



அச்சுப்பணி தாமதமானதால், சட்ட கல்லூரிகளுக்கான விண்ணப்பம் வழங்கும் பணி, ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் அறிவுறுத்தலின்படி, வரும் கல்வியாண்டு முதல், பி.எல்., படிப்பு எல்.எல்.பி., என்றும், எம்.எல்., படிப்பு எல்.எல்.எம்., என்றும் மாற்றப்பட்டு உள்ளது.
இந்நிலையில், 'பல்கலை ஹானர்ஸ் பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., - பி.சி.ஏ., ஆகிய எல்.எல்.பி., படிப்புகளுக்கு, மே 8ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று திட்டமிட்டபடி விண்ணப்பம் வழங்கவில்லை. விண்ணப்பம் வாங்க வந்த ஏராள மான பெற்றோர் மற்றும் மாணவ, மாணவியர் ஏமாற்றம் அடைந்தனர். விண்ணப்பங்கள் அச்சடிப்பதில் தாமதமானதால், திட்டமிட்டபடி வழங்கவில்லை. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி