17 புதிய மருத்துவ கல்லூரிகள்: மத்திய அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 9, 2015

17 புதிய மருத்துவ கல்லூரிகள்: மத்திய அரசு அறிவிப்பு

''நாட்டில், 17 புதிய மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்படும்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி.நட்டா லோக்சபாவில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:



நாடு முழுவதும் மக்களுக்கு, ஆரோக்கிய பராமரிப்பு வசதிகள் கிடைக்க வேண்டும். அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை, மாநில அரசுகளுக்கு வழங்க, மத்திய அரசு தயாராக உள்ளது. அதன் அடிப்படை யில், 17 புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்டவும், 70 மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தவும், திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதில், 22 மாவட்ட மருத்துவமனைகளின் மேம்பாட்டு திட்டங்களும் அடங்கும். தேசிய ஆரோக்கிய திட்டத்தின் கீழ், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் ஆரோக்கிய பராமரிப்பு திட்டங்களுக்கு, இலவச மருந்துகள், பரிசோதனை வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இத்துடன், 'ராஷ்ட்ரிய ஸ்வஸ்தியா பீமா யோஜனா' திட்டத்தின் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஆண்டுக்கு, 30 ஆயிரம் ரூபாய் வரையில், குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சை வசதி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு, 'இலவச ஆரோக்கிய அட்டை' வழங்கப்படுகிறது. இது, படிப்படியாக, அனைத்து மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி