பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் : தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2015

பொறியியல் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம் : தமிழகம் முழுவதும் 60 மையங்களில் கிடைக்கும்


பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம்நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 60 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை மறுநாள் (7-ம் தேதி) வெளியாகிறது.
பள்ளிப் படிப்பை முடிக்கும் பெரும்பாலான மாணவ,மாணவிகள் பொறியியல் படிப்பில் சேரவே ஆசைப்படுகின்றனர். மாநிலத்தில் 570-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சுமார் 2 லட்சம் பிஇ, பிடெக் இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. பொறியியல் கலந்தாய்வை ஆண்டுதோறும் அண்ணா பல் கலைக்கழகம் நடத்தி வருகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யாகும் தேதி அறிவிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் மே 6-ம் தேதி தொடங்கும் எனஅண்ணா பல்கலைக்கழகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. இதற்காக 2 லட்சத்து 40ஆயிரம் விண்ணப் பங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் தமிழகம் முழுவதும் 60 மையங்களில் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகின்றன. விற்பனை மையங்கள் மற்றும் முகவரி விவரங்கள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2015) வெளியிடப் பட்டுள்ளன. சென்னையில் கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், புரசைவாக்கம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, பிராட்வே பாரதி அரசு மகளிர் கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி ஆகிய 4 மையங்களில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணம் ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. அவர்கள் சாதிச் சான்றிதழ் நகலை சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து மையங்களிலும் (ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் நீங்கலாக) காலை 9.30 மணி முதல்மாலை 5.30 மணி வரை விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படும்.

தபால் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கு கட்டணம் ரூ.700. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.450. விண்ணப்பக் கட்டணத்தை ‘The Secretary, Tamilnadu Engineering Admissions’ என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க டிமாண்ட் டிராப்ட் எடுத்து ‘செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 600025’ என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்ப படிவங்கள் மே 27-ம் தேதி வரை விநியோகிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழக மையத்தில் மட்டும் 29-ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 29-ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர்பேராசிரியர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித் துள்ளார். மேலும், மாணவர் களின் வசதிக்காக, கடந்த ஆண்டு எந்தெந்த பொறியியல் கல்லூரி களில் எந்த பாடப்பிரிவுகளில் எவ்வளவு கட் ஆஃப் மார்க் என்ற பட்டியல், 8-ம் தேதி இணை யதளத்தில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ், வெளிமாநிலத்தில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டிய ‘நேட்டிவிட்டி’ சான்றிதழை முன்கூட்டியே பெறவசதியாக அதன் மாதிரியை அண்ணா பல்கலைக்கழகம் முன்கூட்டியே இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

2 comments:

  1. விண்ணப்பம் வாங்கும்போது எதாவது எடுத்து செல்ல வேண்டுமா ?

    ReplyDelete
  2. விண்ணப்பம் வாங்கும்போது எதாவது எடுத்து செல்ல வேண்டுமா ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி