கர்நாடகாவில் கல்வித்துறை பதவி உயர்வுக்கு கம்ப்யூட்டர் கல்விமுக்கியம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2015

கர்நாடகாவில் கல்வித்துறை பதவி உயர்வுக்கு கம்ப்யூட்டர் கல்விமுக்கியம்


பெங்களூரு: 'கம்ப்யூட்டர் கல்வி தொடர்பான தேர்வில் வெற்றி பெறாத, அரசு பட்டப்படிப்பு கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் அல்ல' என, பட்டப்படிப்பு கல்வித்துறை திட்டவட்டமாகதெரிவித்து உள்ளது.கல்வி கற்பிப்பதில் ஆசிரியர்கள், ஊழியர்களின் பங்களிப்பு மிக முக்கியம். எனவே, சிவில் சேவை நியமனம் சட்டம் - 2012ஐ செயல்படுத்தி, கல்வியின் தரத்தை அதிகரிக்க, கல்வித்துறை முன்வந்துள்ளது.
முதற்கட்டமாக, 'கம்ப்யூட்டர் கல்வி தொடர்பான தேர்வில் வெற்றி பெறாத, அரசு பட்டப்படிப்பு கல்லூரி பேராசிரியர்கள்மற்றும் ஊழியர்கள், பதவி உயர்வுக்கு தகுதியானவர்கள் அல்ல' என, பட்டப்படிப்பு கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள உத்தரவில், 'இதுவரை, கம்ப்யூட்டர் தேர்வில் தேர்ச்சிபெறாத ஊழியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கு, எவ்வளவு பணம் செலவாகும் என்பதை கணக்கிட்டு அனுப்ப வேண்டும்' என, தெரிவித்துள்ளார். இந்த விதிமுறை அமலுக்கு வந்த பின், மூன்று ஆண்டுக்குள், கம்ப்யூட்டர் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயமாகும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி