அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறை யீட்டு மனு மீதான விசாரணை முடிந்து நாளை தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், தமிழக - கர் நாடக எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் மேல் முறை யீட்டு மனு மீதான விசாரணை பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக் கில் 11-ம் தேதி காலை 11 மணியள வில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.இதையடுத்து அதிமுகவினர் அதிக அளவில் பெங்களூரு செல்ல வாய்ப்பு உள்ளதால் பாதுகாப்பு கருதி இன்று (10-ம் தேதி) மாலை முதல் தமிழக - கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி, ஜூஜூவாடி மற்றும் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாகலூர் வழியாக பெங்களூர் செல்லும் அனைத்து வழித்தடங்களிலும் இரு மாநில போலீஸாரும்பாது காப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூர் தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபோது மாநில எல்லை யில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதுபோல் தற்போதும் பாதுகாப்பு பலப்படுத் தப்படுகிறது. தமிழகத்தில் இருந்துபெங்களூரு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோத னைக்கு பிறகே அனுமதிக்கப்பட உள்ளதாக இரு மாநில காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி கண்ணம்மாள் கூறும்போது, மாநில எல்லையில் ஓசூர் உட்கோட்ட போலீஸார் 300-க் கும் அதிகமானோர் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். மேலும், எல்லையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கர்நாடக மாநில போலீஸாரிடம் இன்று ஆலோசிக்க உள்ளோம் என்றார்.
இன்று அன்னையர் தினம். நாளை நீதியின் தினம்.
ReplyDeleteNalai ammavin dhinam
ReplyDeleteநாளை அம்மாவுக்கு சிறை தண்டனை உறுதி
ReplyDelete