இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்கள்:மன்னர் ஜவகர் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2015

இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்கள்:மன்னர் ஜவகர் தகவல்

“கடந்த ஆண்டு இன்ஜி., படிப்பில் 68 சதவீதம் கிராமப்புற மாணவர்களே சேர்ந்துள்ளனர்,” என அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார்.காரைக்குடி ராஜராஜன் இன்ஜி., கல்லுாரி ஆண்டு விழா நிகழ்ச்சி யில், அவர் பேசியதாவது: தமிழ்நாட்டில் 22 மாநில பல்கலை கழகங்கள், 3 மத்திய பல்கலைகழகங்கள், 26 நிகர்நிலைபல்கலை கழகங்கள் உள்ளன.
இன்ஜினியரிங் படிப்புக்கென அண்ணாபல்கலை உள்ளது. இன்ஜி., கல்லுாரிஎண்ணிக்கையில் ஆந்திரா முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும், மகாராஷ்டிரா மூன்றாம் இடத்திலும் உள்ளது.தமிழகத்தை சேர்ந்த இன்ஜி., மாணவர்கள் இல்லாத இடம் இல்லை. நாசாவின் 'ஏரோ ஸ்பேஸ்' துறையில், தமிழக ஆராய்ச்சிமாணவர்கள் அதிக அளவில்உள்ளனர்.

கடந்த ஆண்டு இன்ஜி., படிப்பில் சேர்ந்தவர்களில் 68சதவீதம் பேர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். கிராமப்புறமாணவர்கள் கற்பனை திறன்மிக்கவர்களாக உள்ளதால், இன்ஜி.,துறை மென்மேலும் மேம்பட்டு வருகிறது.மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் பாடங்களை நடத்துபவர்களே ஒழுங்கான ஆசிரியர்கள். அண்ணா பல்கலையின் கீழ் உள்ள 538 கல்லுாரிகளில், 450 கல்லுாரி முதல்வராக இருப்பவர்கள், மெக்கானிக்கல் துறையை சேர்ந்தவர்கள். மெக்கானிக்கல் படித்தவர்கள் தலைமைப்பண்பும், ஆளுமைத்திறனும் அதிகம் உடையவர்கள், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி