எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (ஜூன் 8) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.சென்னையில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம், கிண்டி பொறியியல் கல்லூரி, மாநிலக் கல்லூரி உள்பட தமிழகம் முழுவதும் 43 அரசு பொறியியல் கல்லூரிகள், கலைக் கல்லூரிகளில் ஜூன் 30-ஆம் தேதி வரை இந்த விண்ணப்பங்கள்விநியோகிக்கப்பட உள்ளன.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம், கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் ஆகியவற்றின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல், கலை-அறிவியல் கல்லூரிகள், அனைத்து பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இந்த அறிவிப்பை தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.விண்ணப்பக் கட்டணம் ரூ. 400 ஆகும். எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவினர் ரூ. 200 கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பக் கட்டணத்தை "செயலர் தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்.சி.ஏ. சேர்க்கை 2015, அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவை' என்ற பெயரில் கோவையில் மாற்றத்தக்க வகையிலான வரைவோலையாக எடுத்து சமர்ப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்தி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30 கடைசி தேதியாகும்.
கலந்தாய்வு ஜூலை மூன்றாவது வாரத்தில் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் விவரங்களுக்கு www.gct.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி