புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை செவல்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆசிரி யர்கள் எஸ்.ஆரோக்கிய அருள்தாஸ், ஏ.லதாமகேஸ்வரி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
எங்கள் பள்ளி ஆசிரியர் இளையராஜாவும், பள்ளி தலைமை ஆசிரியரும் வெவ் வேறு ஆசிரியர் சங்கங்களில் இருந்தனர். இவர்கள் இருவர் இடையே மோதல் நிலவியது. இதனால் ஆசிரியர் இளையராஜா 2.6.2015-ல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இது தொடர்பாக தலைமை ஆசிரியர் மீது போலீஸார் வழக்குபதிவு செய்தனர்.இந்நிலையில் எங்களை வேறு பள்ளிக்கு மாற்றுப் பணி இடமாறுதல் செய்து, மாவட்டதொடக்கக் கல்வி அலுவலர் 3.6.2015-ல் உத்தரவிட்டார். எங் களுக்கு மாற்றுப் பணி இடமாறுதல் வழங்கியது சட்டவிரோதம். அதை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்கள் தற்காலிகமாகத் தான் இடமாறுதல் செய்யப்பட் டுள்ளனர். மாணவர்களின் நலன் கருதியும், நிர்வாக நலன் கருதியும் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கும்போது அதை கேள்வி கேட்க முடியாது. ஆசிரியர் பணி என்பது இடமாறுதல் வழங்கக் கூடிய பணிதான். தங்களிடம் விளக்கம் பெறாமல் இடமாறுதல் வழங்கியதாக மனுதாரர்கள் கூறுவதை ஏற்க முடியாது.
விரும்பிய இடத்தில்தான் பணிபுரிய வேண்டும் என ஆசிரியர்கள் நினைத்தால், அவர்கள் ஆசிரியர் தொழிலை தேர்வு செய்யக் கூடாது. தேசத்தின் எதிர்காலத்தை உருவாக்கு பவர்கள் ஆசிரியர்கள். அவர்களை பிரதிபலிப்பவர்கள்தான் குடிமக்கள். ஆசிரியர்கள் பரந்த மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்.தேவையற்று வழக்கு போட்டு ஆசிரியர்கள் தங்களின் பொன்னான நேரத்தை வீணடிக்கக்கூடாது. ஆசிரியர்கள் தங்களின் சக்தியை, நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் செலவிட வேண்டும் என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
5 laksh vangittu than tarnsfer poduringa marupadiyum mathuna teachers enna panuvwnga
ReplyDeleteCORRECT SIR.SILA TEACHERS TRANSFER ORDER VANGIVITU CEO VAI CORRECT PANNI TRANSFER CANCEL PANNI MEENDUM OLD SCHOOL SOKUSU VAZGAYAI AARAMBIGINTANAR.PALAIPONA HEADMASTER TRANSFER VANGIYATHAL SCHOOL OPEN PANUMVARAI INCHARGE PANI PURINTHU MANAVAR NALAN KARUTHI NOTE, BOOK, CHAPPAL, MEETING GAIKASU SELAVALITHU KASTAPATATHODU, LEAVE NAADGALIL GULANTHAYODUM KUDUMPATHODUM ILLAMAL NIRVAGA NALAN KARUTHI VELAI PARTHA PIRAGUM CEO VIN AATHIGATHAL PATHIGAPATU SELAVALITHA PANATHAI KETAL KODA PANAM THARAMAL SCHOOL,PTA FUNDS SAPITU YEPAM VIDUM HEADMASTERS. INCHARGE PANI PURINTHU SELAVU MULUVATHUM MERGONDULARE YENTA MANITHAPIMANAM GUDA ILLATHA HEADMASTERS VALKINTANAR.CEO VAL PAZHI VANGUM YENNAMAGA 17 (b).
ReplyDelete