ரயில் பயணத்தின்போது, அவசர தேவைக்காக இருக்கும் அபாய சங்கிலி நீக்கப்படுகிறது. இனி சம்பந்தப்பட்ட ரயில் ஓட்டுநருக்கு மக்கள் செல்போன் மூலம் புகார் அளிக்க முடிவு செய்யப்பட் டுள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
இது ரயில் ஓட்டுநர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.
அவசர தேவைக்கு பயன்படுத் தும் அபாய சங்கிலியை, சிலர் அவசியம் இல்லாத சிறியகாரணங்களுக்காக சங்கிலியை இழுத்து, ரயிலை நிறுத்துவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால், விரைவு ரயில்கள் தாமதமாக செல்கின்றன. இது போன்ற சம்பவங்கள் ரயில் ஓட்டுநர் களுக்கு பெரும் பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது.மேலும், இதுபோன்ற சம்பவங்களால் ரயில்வே துறைக்கு ரூ.3,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.எனவே, இதற்கு மாற்றுத் தீர்வாக ரயில் இன்ஜின் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர்கள் ஆகி யோரின் செல்போன் எண்கள் அச்சடிக்கப்பட்டு, பெட்டிகளில் ஒட்டப்பட்டு இருக்கும். அவசரத் தேவையின் போது, பயணிகள், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் செல் போனில் அழைத்து ரயிலை நிறுத் திக்கொள்ளலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பாக விரைவு ரயில்களை இயக்கும் ஓட்டுநர்கள் கூறியதாவது: ரயில்களைஇயக்குவது என்பது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய பணியாகும்.
செல்லும் நீண்ட தூரத்துக்கும் ஒட்டுமொத்த ரயிலின் இயக்கத்தையும் சிக்னல் களையும் தொடர்ந்து கண் காணிக்க வேண்டும். சில இடங் களில் இவ்வளவு தூரம் வேகம் தான் செல்ல வேண்டுமென எச்சரிக்கை பலகை இருக்கும், இதையெல்லாம் பார்த்துதான் செல்ல வேண்டும். பணியின் போது, செல்போன் பயன்படுத் தவே கூடாது. வாக்கி டாக்கியைதான் பயன்படுத்த வேண்டும். அதுவும், சிக்னல்களை கடக்கும்போது வாக்கி டாக்கியை கூட பயன்படுத்தக்கூடாது. இந் நிலையில், நாங்கள் எப்படி செல் போன் மூலம் பயணிகளின் அவசர கால தகவல்களை பெற முடியும். செல்போன் மூலம் ஓட்டுநர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டுமென்ற முறையில் இருந்து ரயில்வேத்துறை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றனர்.
சங்கிலியை இழுத்தால் ரயில் எப்படி நிற்கிறது?
டீசல் மற்றும் மின்சார ரயில்கள் வாக்வம் பிரேக் மூலம் நிறுத்தப்படுகிறது. ஏர் கம்ப்ரஸர்ஸ் மற்றும் வாக்வம் எக்ஸாஸ்டர்ஸ் ரயில் இன்ஜின் மற்றும் பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் ஓடிக் கொண்டிருக்கும்போது ரயில் பெட்டிகளின் அடிப்பாகத்தில் பொருத்தப்பட்டுள்ள வாக்வம் குழாய்களில் வெற்றிடம் உருவாக்கப்படுகிறது. எல்லா பெட்டிகளிலும் பொருத்தப்பட்டுள்ள வாக்வம் சிலிண்டர்களிலும் வெற்றிடம் உருவாக்கப்படும். ரயில் பெட்டியிலுள்ளஅபாயச் சங்கிலியை நாம் இழுக்கும்போது, வெற்றிடத்தை உருவாக்கும் கருவியானதுநிறுத்தப்பட்டு, அதனுடன் பொருத்தப்பட்டுள்ள வால்வு திறந்து, காற்று உள்ளே செலுத் தப்படுகிறது. இதன் மூலம் பிரேக் செயல்படத் தொடங்குகிறது.
வெற்றிடக் குழாய்கள் அனைத்துப் பெட்டிகளுடன் இணைக் கப்பட்டிருப்பதால், காற்று அனைத்துப் பகுதி யிலும் நுழைந்து எல்லா பெட்டி களிலும் பிரேக் செயல்படத் தொடங் குகிறது. அபாயச் சங்கிலியை இழுத்த 30 முதல் 60 வினாடிகளுக்குள் ஓட்டுநருக்கும், கார்டுக்கும் தகவல் தெரியும். இந்த தகவல்தெரிந்தவுடன் ரயில்கள் எவ்வளவு வேகமாக சென்றாலும் 3 நிமிடங்கள் முதல் 5நிமிடங்களில் ரயில்களை நிறுத்த முடியும்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி