அரசு பள்ளிகள் தரத்தை மேம்படுத்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 11, 2015

அரசு பள்ளிகள் தரத்தை மேம்படுத்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களுக்கு உத்தரவு

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் செயல்பாட்டில், கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் ஈடுபட வேண்டும் என, உத்தரவிடப்பட்டுஉள்ளது.இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஆசிரியர் பயிற்சி நிறுவன கல்வியாளர்கள், அரசு பள்ளிகளை ஆய்வு செய்து, பள்ளி செயல்பாட்டில் உள்ள சிரமங்களை போக்க உதவ வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வலியுறுத்தியுள்ளது.இதன்படி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வட்டாரத்தில், ஒரு அரசு துவக்க அல்லது நடுநிலைப்பள்ளியை, தொடர்ந்து ஒரு பருவம் முழுவதும், மாதந்தோறும் பார்வையிட வேண்டும்; பள்ளி தரத்தை முன்னேற்றும் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும்.
இந்த பணியை முழுமையாக செயல்படுத்த, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள், விரிவுரையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். பயிற்சி நிறுவன முதல்வர்களும், வட்டாரத்தில் ஒரு பள்ளியை தேர்வு செய்து, இப்பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

6 comments:

  1. CM CELL REPLY(STATUS) FOR 669 ADW (SGT)POSTING;

    Track your Grievance;

    Name ;S.SARAVANAN

    Petition No; 2015/829045/NR Petition Date 06/06/2015


    Grievance;

    ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட ஆதிதிராவிட நலப்பள்ளிகளுக்கான669 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரை கிளையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், இதுவரை பணிநியமனம் வழங்கப்படவில்லை. பணி நியமனம் தாமதமாக இருந்தாலும் டி.ஆ.பி. தேர்வு பட்டியலையாவது வெளியிட்டால் தேர்வர்கள் தங்கள் அடுத்தகட்ட வாழ்க்கை செயல்பாடுகளை மேற்கொள்வர். எனவே தேர்வர்களின் நலன் கருதி ஐகோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில், இதுவரை ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிநியமனத்தில் கடைப்பிடிக்கப்பட்டுவந்த விதிகளின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்ற ஆதிதிராவிட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடியாக தேர்வுப்பட்டியலை வெளியிட உத்தரவிட வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    Grievance Category ;EMPLOYMENT - REGULAR EMPLOYMENT


    Petition Status ;
    "Forwarded to the concerned officer for necessary action"

    Concerned Officer; SCHOOL EDUCATION - SECY,TEACH.RECRUITMENT BOARD


    Data updated and maintained by Chief Minister's Special Cell
    Designed and developed by National Informatics Centre, Chennai

    ReplyDelete
  2. தேர்வு மதிப்பெண்ணை வெளியிடாமல் ஆய்வக உதவியாளர் தேர்வு ..
    கீ ஆன்சர் தர மாட்டீர்கள் ...
    மதிப்பெண் சொல்ல மாட்டீர்கள் ....
    நேர்முக மதிப்பீடு வெளியாகாது ....
    கடைசியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடுவீர்கள் . ..
    இப்படியொரு தேர்வு நடத்த தேர்வு கட்டணம் என்ற பெயரில் வசூல். . .
    வட்ட செ,சதுர செ,மா செ மூலமாக உங்கள் அடிவருடிகளை தேர்ந்தெடுக்காமல் எங்கள் மனதில் ஏன் ஆசையை விதைக்கிறீர்கள்????
    இப்படி எங்களை பாடாய் படுத்துவதற்கு பதில் "விலையில்லா பூச்சி மருந்து" கொடுத்து கொன்று விட்டு , உங்களுக்கு ஜால்லரா போடும் அடிவருடிகளை வாழ வையுங்கள். .. .

    ReplyDelete
  3. Hai friends b.ed fail ayita tet elutha mutiyuma

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி