வாட்ஸ் அப்பின் இருபது கோடி பயனாளர்களை மிரட்டும் ஹேக்கர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2015

வாட்ஸ் அப்பின் இருபது கோடி பயனாளர்களை மிரட்டும் ஹேக்கர்கள்

பிரபல செயலியான வாட்ஸ்-அப்பை சுமார் 20 கோடி பேர் தமது மொபைல்களிலும், தனிநபர் கணினிகளிலும் அனுதின மெஸேஜ்கள் அனுப்ப பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் இதன் மொபைல் செயலியில், மொபைல் நம்பரைக் கொண்டு ஹேக்கர்கள் சுலபமாகஅவர்களது போனுக்குள் வைரஸ்களை அனுப்பும் அபாய நிலை இருந்தது.


மொபைலுக்கு வந்த இந்த பிரச்சனையை சீராக்கிவிட்டனர். எனினும், கணினிகளில் ‘வெப்அப்’ மூலமாக இதனைப் பயன்படுத்தும், பயனாளர்களுக்கு ’பிசினஸ் கார்ட்’ போல அனுப்பப்படும் மெசேஜை திறந்தாலே அவர்களது கணினிக்குள் வைரஸை அனுப்ப முடியும் என ‘ஈஸாட்’ நிறுவனத்தின் பாதுகாப்பு நிபுணர் மார்க் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.ஆகவே, தெரியாத நம்பரிலிருந்து வரும், மெசேஜ்களை திறப்பது அந்த கம்யூட்டரையே சீரழிக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார். ஆகையால், வைரஸ்-எதிர்ப்பு மென்பொருளைமுன்கூட்டியே, இன்ஸ்டால் செய்வது மட்டுமே, ஒரே வழி என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி