பணியின் போது இறக்கும் போக்குவரத்துக் கழக ஊழியரின் வாரிசுக்கு தகுதிக்கேற்ப பதவி: தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 5, 2015

பணியின் போது இறக்கும் போக்குவரத்துக் கழக ஊழியரின் வாரிசுக்கு தகுதிக்கேற்ப பதவி: தமிழக அரசு அறிவிப்பு

பணியின் போது இறக்க நேரிடும் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போக்குவரத்துக் கழக மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பின்னர், போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.தங்கமணி வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:


*பணியின்போது இறக்கும் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில், கல்வித் தகுதிக்கேற்ப வேலை வழங்கப்படும். அது ஒரு போக்குவரத்துக் கழகத்துக்கு 100 பணியிடங்கள் வீதம் 8 போக்குவரத்துக் கழகங்களுக்கு 800 பணியிடங்கள் என, 2 ஆண்டுகள் பயிற்சியளித்து நிரப்பப்படும்.


*பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் ஊழியர்களின் குழந்தைகளைஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு போக்குவரத்துக் கழகத்திலும் முதல் 10 குழந்தைகளின் மேல் படிப்புக்கான கல்விக் கட்டணம் அரசால் திரும்ப வழங்கப்படும்.


*போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உரிமங்களைப் புதுப்பிக்கும்போது செலுத்தும் கட்டணம் அரசால் திரும்ப வழங்கப்படும்.ரொக்கப்பரிசு உயர்வு: போக்குவரத்துக் கழகத்தில் ஓர் ஆண்டு விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் ரொக்கப் பரிசு ரூ. 1,000 தொகை, ரூ. 1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இத்தொகை, ஐந்து ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநருக்கு ரூ. 5,000 ஆகவும், 10 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு ரூ. 10,000 ஆகவும் நிகழாண்டு முதல் வழங்கப்படும்.


மேலும், 15 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் ரூ. 10,000 ரொக்கப் பரிசு இனி ரூ. 15,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். 20 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு ரூ. 15,000 இனி ரூ. 20,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.25 ஆண்டுகள் விபத்தின்றிப் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் ரொக்கப் பரிசு ரூ. 20,000 இனி ரூ. 25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி