தொழில்நுட்ப தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2015

தொழில்நுட்ப தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு தேர்வுத்துறை இயக்குனர் பொறுப்பு வகிக்கும் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அரசு தொழில்நுட்ப தேர்வுகள், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடக்க உள்ளன.


ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும்தையல் பிரிவுகளுக்கு தேர்வுகள் நடக்கும். இதை எழுத விரும்புவோர், வரும், 14 முதல், 20ம் தேதி வரை, தேர்வுத்துறையின் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பம் அளிக்கலாம். விண்ணப்பங்களை, www.tndge.in என்ற, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். அந்தந்த வருவாய் மாவட்டத்தில் விண்ணப்பிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்கள் மூலம், 'ஆன் - லைனில்' புகைப்படத்துடன் விண்ணப்பிக்காதவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி