ஒய்வூதிய பங்களிப்புத் தொகை ரூ.30 ஆயிரம் கோடி எங்கே?ஜேக்டோ ஆசிரியர்கள் ஆவேசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

ஒய்வூதிய பங்களிப்புத் தொகை ரூ.30 ஆயிரம் கோடி எங்கே?ஜேக்டோ ஆசிரியர்கள் ஆவேசம்

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு "ஜேக்டோ' சார்பில் திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர்களின் ஓய்வூதிய பங்களிப்புப் தொகை நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ளது, என குற்றம் சாட்டப்பட்டது.


தமிழகத்தில் 29 ஆசிரியர்கள் சங்கங்கள் இணைந்த ஆசிரியர் கூட்டமைப்பினர், கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ), 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. திண்டுக்கல் மற்றும் பழநி கல்வி மாவட்டத்தை சேர்ந்த 15 ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நேற்று திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


ஜேக்டோ மாவட்ட தொடர்பாளர்கள் ஜான்பீட்டர், சந்திரசேகர், உயர்மட்டக்குழு உறுப்பினர் மோசஸ் தலைமை வகித்தனர்.அவர் பேசியதாவது : 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட மறுக்கிறது. இதே நிலை நீடித்தால் எங்கள் அமைப்போடு, அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு (ஜியோ) உறுப்பினர்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். வரும் அக். 10, 11ல் ஜேக்டோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகுறித்து கலந்தாலோசிப்போம், என்றார்.


ஆசிரியர் போராட்டம் குறித்து முதன்மை கல்வி அதிகாரி சுபாஷினி கூறியதாவது:


திண்டுக்கல் மாவட்டத்தில் 9549 ஆசிரியர்கள் உள்ளனர். இதில் 5295பேர் பணிக்கு வந்தனர். 4254 பேர் "ஆப்சென்ட்' ஆகினர். மாணவர்கள் பாதிக்காதவாறு பகுதி நேர ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றினர். இதனால் பாதிப்பு இல்லை, என்றார்.30 ஆயிரம் கோடி எங்கே:தமிழக ஆசிரியர் கூட்டணி திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஜான்பீட்டர் கூறியதாவது: ஒவ்வொரு மாதமும் ஆசிரியர்களின் ஊதியத்தில் 12 சதவீதத் தொகை பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பிடித்தம் செய்தார்கள். பிடித்தம் செய்யப்பட்ட தொகை கருவூலத்தில் செலுத்தப்படுகிறது. அந்த தொகைக்கான ரசீதோ, கணக்குச் சீட்டோ ஆசிரியர்களுக்குவழங்கப்படவில்லை. தமிழகத்தில் 2004 முதல் பணிபுரியும் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் பத்தாண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி பங்களிப்பு ஓய்வூதியமாக செலுத்தியுள்ளனர். அந்தப்பணம் என்னானது என தெரியவில்லை, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி