ஏழை மாணவர்களுக்கு உதவும் ‘ஸ்மைல் கிளப்’ சென்னையில் தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 9, 2015

ஏழை மாணவர்களுக்கு உதவும் ‘ஸ்மைல் கிளப்’ சென்னையில் தொடக்கம்

ஏழை எளிய மாணவர்களுக்கு உத வும் ஸ்மைல் கிளப் எம்.எஸ்.சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நேற்று தொடங்கப்பட்டது.ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் அடிப்படை தேவைகள் வழங்கும் வகையிலான இந்த ஸ்மைல் கிளப்பை வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.


எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், ஹோப் நிறுவனம் மற்றும் கிட்ஸ் ஃபார் கிட்ஸ் அமைப்பினர் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.ஸ்மைல் கிளப் ஒருங்கிணைப் பாளர் பியங்கா வெங்கட்ரமணி கூறும்போது, “தமிழ்நாட்டின் கிரா மங்களில் உள்ள ஏழை மாணவர் களுக்கு உதவுவதுதான் ஸ்மைல் கிளப் நோக்கம். இதற்காக நிதி திரட்டவுள்ளோம்.


ஸ்மைல் கிளப் பின் முதல் முயற்சியாக ‘ஒரு குழந் தையை தத்தெடுத்துக் கொள்ளுங் கள்’ என்ற திட்டத்தை தொடங்கி யுள்ளோம்” என்றார்.எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒவ்வொரு குழந்தையும் விஞ்ஞானிதான் என்ற திட்டத்துடன் இணைந்து ஸ்மைல் கிளப் செயல்படும். இந்நிகழ்வில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர்அஜய் கே.பரிடா, ஹோப் நிறுவனத் தின் அறங்காவலர் சாமுவேல் ஆப்ரகாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி