நேரடி மாணவர் சேர்க்கையில் முறைகேடா சர்ச்சையில் மதுரை காமராஜ் பல்கலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2015

நேரடி மாணவர் சேர்க்கையில் முறைகேடா சர்ச்சையில் மதுரை காமராஜ் பல்கலை

மதுரை:மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில், நேரடி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் நடந்த முறைகேடு புகார்களால் மே மாதம் தேர்வு முடிவு அறிவிப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


இப்பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககத்தில், நேரடி மாணவர் சேர்க்கை முறையில்,2014ம் ஆண்டு டிச., தேர்வில் ஏற்கனவே சர்ச்சை எழுந்தது. இதனால், 50சதவீதம் மாணவர்களுக்கு இன்னும் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படவில்லை.இந்நிலையில், இளநிலை மற்றும் முதுநிலை பிரிவு மாணவர்களுக்கு, இந்தாண்டு மே மாதம் தேர்வுகள் நடந்தன. இதில், 1918 மாணவர்கள் நேரடி சேர்க்கையில் தேர்வு எழுதினர். ஐந்து மாதங்களாகியும் இவர்களுக்கு மட்டும் முடிவுகள் வெளியிடப்படவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறியதாவது:

மே தேர்வு எழுதிய வழக்கமான மாணவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வழங்கப்பட்டன. ஆனால், நேரடி சேர்க்கை முறையில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து கேட்டால் பல்கலை அலுவலர்கள் மழுப்பலாக பதில் கூறி, அலையவிடுகின்றனர். ஏன் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? என்ற விபரம் தெரிவிக்க மறுக்கின்றனர். இதனால் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, என்றனர்.

பதிவாளரின் திடீர் உத்தரவு:

இதற்கிடையே பல்கலை பதிவாளர் ராஜசேகர், தொலைநிலைக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:2014ம் ஆண்டு முதல் நேரடி மாணவர் சேர்க்கை தேர்வு முடிவுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். 2015ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை தொடர்பான விண்ணப்பங்களை பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும். மறு அறிவிப்பு வரும் வரை நேரடி சேர்க்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி