தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை:மீண்டும் காற்றழுத்தத்தாழ்வு நிலை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2015

தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை:மீண்டும் காற்றழுத்தத்தாழ்வு நிலை

வங்கக் கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கையை ஒட்டி புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


தமிழகத்தின் சில மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பலத்த மழை பெய்ததால் வெள்ளச் சேதம் ஏற்பட்டது. தற்போது மழை குறைந்து இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் புதுவையிலும் பலத்த அல்லது மிகபலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதாவது அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில், ஓரிருஇடங்களில் பலத்த, மிகப் பலத்த மழையை எதிர்பார்க்கலாம். மேலும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் பலத்த மழை பெய்யும்.சென்னை மாநகரைப் பொருத்தவரை, பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி