'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டம் புத்துயிர் தருமா கல்வித்துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2015

'சஞ்சாயிகா' சேமிப்பு திட்டம் புத்துயிர் தருமா கல்வித்துறை

பள்ளி குழந்தைகள் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல ஆண்டுகளுக்கு முன், பள்ளி கல்வித்துறை மூலம், 'சஞ்சாயிகா' என்ற சிறுசேமிப்பு திட்டம்செயல்படுத்தப்பட்டது.


துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இத்திட்டம், நாளடைவில் முடங்கியது. இன்றைய காலகட்டத்தில் மாணவ, மாணவியர் மத்தியில், பணப்புழக்கம் அதிகமாக உள்ளது. அலைபேசி, சினிமா, சுற்றுலா என, வீணாக இப்பணத்தை செலவிடுகின்றனர்.சிறு வயதில் மாணவ, மாணவியர் மத்தியில் சிக்கனம், சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். பள்ளிகளில், 'சஞ்சாயிகா' சிறுசேமிப்பு திட்டத்துக்கு புத்துயிர் தந்து, தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி