ஸ்மார்ட் கார்டு திட்டத்தை தொடங்குவதற்கான ஆரம்ப கட்டமாக ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைத்தலை அவசியமாக்கியுள்ள தமிழக உணவுப் பொருள் வழங்கல்துறையினர், நியாயவிலைக் கடைகளில் ஆதார் அட்டையை நேரில் ஒரு முறை காண்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு ஸ்மார்ட் கார்டு திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக உணவுபொருள் வழங்கும் துறைமுடிவு செய்துள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த நுகர்வோரின் விவரங்கள் அவசியம். இந்த விவரங்களை தற்போது ஆதார் கார்டுடன் இணைத்துள்ளதால்ஆதார் கார்டு பெற்றவர்கள் அந்த எண்ணை நியாயவிலைக் கடைகளில் ஒரு முறை காண்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார் கூறியதாவது:ஆதார் அட்டை எடுத்து வரும் நுகர்வோரிடம் அதைப்பெற்று அந்த எண்ணை குறிப்பேட்டில் குறித்து கொள்ளுமாறு பணியாளர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். எதிர்காலத்தில் ஸ்மார்ட் கார்டு திட்டத்தை கொண்டுவர ஆதார் அட்டை விவரங்களைசேர்க்க இது உதவும். எனவே ஒரு முறை ஆதார் அட்டையை கொண்டு வர சொல்கிறோம். அதே சமயம் ஆதார் அட்டை கொண்டு வந்தால் தான் பொருள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் குறித்து தகவல் அளித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார்.
Jan 14, 2016
Home
kalviseithi
குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் அவசியம்
குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் அவசியம்
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி