அரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு கிடையாது.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு - kalviseithi

Sep 26, 2018

அரசு பணி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி. இடஒதுக்கீடு கிடையாது.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு


எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசுப் பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 2ம் தேதியோடு முடிவடைகிறது. இந்த நிலையில் இன்று மிக முக்கியமான எஸ்சி/எஸ்டி பதவி உயர்வு வழக்கு ஒன்றில் அவர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

SC/ST reservations in promotion: SC favors the 2006 judgment, Said No to reservation

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு அரசு பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது இடஒதுக்கீடு வழங்க கூடாது என்று கடந்த 2006-ம்ஆண்டில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.இதற்கு எதிராக மத்திய அரசும், பல சிறுபான்மையினர் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு மீதான விசாரணை நீண்ட நாட்களாக நடந்தது. பல்வேறு காரணிகள் இதில் கருத்தில் கொள்ளப்பட்டது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் பின் தங்கியநிலையில் இருப்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றம் ஆராய்ந்து. மேலும் அரசு பணியில் இவர்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லை என்பது குறித்தும் ஆராயப்பட்டது.இந்த நிலையில் கடந்த மாதம் விசாரணை முடிந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஏழு நீதிபதிகளின் அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.

அதன்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு அரசுப் பணிபதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கிஉள்ளது.2006ல் வழங்கப்பட்ட தீர்ப்பு சரிதான். அரசு வேலைவாய்ப்பில் பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது என்று தீர்ப்பளிக்கப்ட்டு இருக்கிறது.

12 comments:

  1. அணைவரும் சமம் நன்றி

    ReplyDelete
  2. நல்ல தீர்ப்பு.

    ReplyDelete
  3. நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு...

    ReplyDelete
  4. நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு...

    ReplyDelete
  5. ஜாதிகள் இல்லையடி பாப்பான்னு நாங்க சொல்லுவோம்,
    ஜாதி ஒழிப்புனு வேற ஜாதி பொண்ண இழுத்துட்டு போவோம்,
    ஆனா வேலை படிப்புன்னு வந்துட்டா ஜாதி மட்டும் வெச்சு தான் வாங்குவோம்,

    ReplyDelete
  6. இட ஒதுக்கீடு போதும். இனி வேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி